பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரைந்து வரும் கிறிஸ்துமஸ்

சிக்கிய அரை ராத்தல் மீன் மார்வின் அளவு பெரிதாகத் தோன் நியது. இரண்டு ராத்தல் கனமுள்ள ஒரு சோதா மீன் ஒது திமிங்கலத்துக்குச் சமமாகும். -

படகின் பெட்டியில் நான் எப்பொழுதும் ஒரு பொரிக்கும் தட்டு, சோள மாவு, உப்பு, மிளகு, காடி எல்லாம் வைத்திரும் பேன். மணல் மேட்டில் எரிசுள்ளிக்குப் பஞ்சமில்லே. மீன்கள் கவ்வுவதை நிறுத்தவும், என் வயிறு உறு:கவும் தொடங்குகித போது, கடலோர விருந்து என வட கரோலினுவில் கருதப்ப்ட்ட தற்கு இணையான சாப்பாட்டை எனக்கு நானே தயாரித்துக் கொள்வேன். மென்மையான ஒடு பெற்ற நண்டுகள், புதிய இப்பிகள், நெருப்பை உணர்கிற்வரை துள்ளுவதை நிறுத்த்தை மீன்கள் ஆகியவற்றில் உண்மையிலேயே தவறு ஒன்றுமில்லைதான். நீர் ஒரு பையனுய், மிகுந்த பசியோடு, தன்னந் தணியளுய் எல்லே பற்ற கொதிக்கும் மணல் பரப்பு, சதுப்பு, வானம், கடல் இவற். நிடையே இருந்தால், அவை சிறப்பாகவே தோன்றும்,

மணலையும், உப்பு நீரையும் உபயோகித்து நான் கொம் பரையைச் சுத்தம் செய்து, என் முகத்திலும் கைகளிலும் படித் திருந்த பிசுக்கைக் கழுவிவிட்டுத் தீயை அணேத்த பிறகு, படகில் ஏறிய போது, அலைகள் ப்லம்ாக மோதிக் கொண்டிருந்தன. அவற்றிடையே படகை வலித்துச் செல்வது ஒரு கப்பலின் மாலுமிகணம் முழுமைக்கும் ஏற்ற வேலையாகத் தோன்றியது. சூரியன் எப்பொழுதும் மூன்று அல்லது நான்கு மணிக்குக் காய்வது போலவே, மத்தியான நேரத்தைவிட உறைப்பாகத் தாக்கியது. நான் குடிசை போய்ச் சேருவதற்குள் வேர்த்துக் கொட்ட வானேன். *

குடிலுக்குள் படகை இழுத்துச் சேர்ப்பதும், பிறகு தண்ணீரில் வேகமாகக் குதித்தெழுவதற்காகத் துறை வாராவதிக்குப் போன் தும் எளிய காரியம் தான். மீன்கள், இப்பி, நண்டுகள் ஆகிய வற்றில் மீதமிருந்ததைச் சேகரித்துக் கொண்டு, துடுப்புக்களையும்,

3.

கயிறு, வலை எல்லாவற்றையும் தோளில் சுமந்தபடி வீடுபோய்ச் சேருவது சிரமமாகத்தான் தோன்றியது. - * / தாத்தா வீட்டின் முகப்பில், குழாயைப் புகைத்துக் கொண்டு, தனது அபிமான நாற்காலியில் மெதுவாக அசைந்தபடிஇருத்தார். அவர் முன்னைவிட நல்லுணர்வு பெற்றவர்போல் தோன்றினர். வயது குறைந்தவர் போலவும் காணப்பட்டார். நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ? என்று அநாவசியமாய் கேட்டார்.

  • நான் படகில் போனேன் ; மீன் பிடித்தேன்’ என்றேன். ‘ என்னிடம் சொல்ல விரும்புகிற சுவாரஸ்யமானது எதை யாவது நீ பார்த்தாயா?’ என்றார்.அவர்
  • அதிகமாக ஒன்றுமில்லை, எல்லாம் பழைய விஷயம் தான், சதுப்பு, தண்ணீர், மீன், பறவைகள்-அதே விஷயங்கள் தான் ” என்று கூறினேன். -