பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

பேராசைக்குடலன் என்று பிரக்யாதி பெற்ற ஒரு வர்க்கத் தைச் சேர்ந்தவன் நான். தாத்தா உணவை விட்டு விலகுகிறார் என்று உணர்ந்தேன். அவரைத் தத்துவத்திலிருந்து விலக்கி, சாப்பாட்டு விஷயத்திலேயே நிறுத்த விரும்பினேன்.

  • பழங்காலத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லு. இந்தக் காலத்தில் அதிகமாகக் கிடைக்காத வேறு எவை எல்லாம் தின்ன சுலபமாகக் கிட்டியது ?’ என்றேன். “. - .

‘ எருமைத் திமில் எதையும் நான் ஒருபோதும் தின்றதில்லை. அது என் காலத்துக்கு முந்திய விஷயம். மேலும் அது அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டதாக எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இந்தப் பிராந்தியத்தில் மிக அதிகமான எருமைகள் இருந்தது மில்லை. ஆயினும், காலே உணவுக்கு வாட்டிய காடையைப் போல்-சந்தேக மின்றி, மார்புக் கறி தான்-சிறந்தது வேறெதுவு மில்லை. வேகவைத்த மென்மையான நண்டும் அவ்வளவாக் வெறுப்பு தராது. இன்று காடைகளைச் சட்ட விரோதமான முறையில் தான் வாங்கமுடியும். முன்பு அவர்கள் அவற்றைச் சுட ம்ாட்டார்கள்; கண்ணி வைத்தே பிடித்தார்கள். நிர். 8-ஆல் சுட்டவற்றை நாம் எப்பொழுதும் ஜீரணித்தோம் என்பதற்கில்லை. - “ ப்ளோவர் பறவைகளின் முட்டைகளே, அல்லது ஹம்மிங் பறவைகளின் நாக்குகளை, அல்லது அதுபோன்ற உவப்பானது எதையேனும் நான் தின்றதேயில்லை. ஆனால், ஒரு முயலைச் சரியாகச் சமைத்தால், ருசிகரமான எந்த உணவும் அதற்கு ஈடாகாது. மான் கறியைவிட அத்துடன் எவ்வளவு ஒயினையும், வெண்ணென்ய யும் கொட்டியிருந்தாலும் பரவாயில்லை-முயலையும் ருசிகர உணவையும் நான் பெரிதும் விரும்புகிறேன். எனக்குப் புதிதாகக் தொல்லப்பட்ட மானின் தறியே சிறந்ததாகும். நர்ம் கள்ைப்பும் பசியும் பெற்றிருக்கும் வேளையில், கொஞ்சம் மதுவை உள்ளே தள்ளிவிட்டு, தீயின் முன்னமர்ந்து வெம்மையுறும் வேளையில், ஹிக் கரிக் கட்டை நெருப்பின் மேல் வேக வைக்கப்படும் மானிறைச்சித் துண்டுகளும் ஈரலும் மிகச் சிறந்தன. ஏஞே, ஒரு ஒட்டலில் பெறுகிற மானிறைச்சி கொடியதாகத் தோன்றுகிறது. மான்ட உயிருடனே, இறந்ததாகவோ ஒட்டலுக்கு உரியது அல்ல. ஆனல், காட்டிலுள்ள சகல பிராணிகளின்-கரடியையும் சேர்த்தே தான்மாமிசத்தையும் தரக்கூடிய நிலையில் இல்லாத ஒரு ஒட்டல் மட்ட மானதே யாகும். ‘

  • வேறு என்ன ? ?”

எப்பவரவது_தொஞ்சம் விஸ்கியை நான் விரும்புகிறேன் என்பது உனக்குத் தெரியும். அந்த மனிதன் வால்ஸ்டெட் தனது சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு, ஒருவன் சுமார் ஒரு டாலருக்கு அருமையான விஸ்கி ஒரு பாட்டில் வாங்க முடியும்: அவன் மதுக்கடையில் குடித்தால், விற்குமிடத்தில் ஒரு பெண்ணும் இல்லாமலே, உயர்வான சூழ்நிலையில், நயமான் சர்க்கை அன்மதி: