பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை மசியல்

பாப் குடிக்க முடியும். பழுப்புச் சர்க்கரையால் முதிரச் செய்து, பழச்சாடிகளில் விற்கிறார்களே வெள்ளே விஷம், அது போன்றதை அல்ல. அருமையான சிவப்பு விஸ்கி மனிதனுக்குப் பகையாக விளங்குவதற்கு மாருக, சுகம் தரும், பீர் பெரும் பீப்பாயிலிருந்து சிறு பீப்பாய்களில் நியமாக வந்து சேரும். அதனுல் ஜனங்களுக்குப் பிடித்தமானது ஆயிற்று அது. அதன் விலை அஞ்சு சதமே. அத் துடன் இளும் உணவுக்கு ஒரு அளவு கிடையாது.”

“ இனம் உணவு பற்றி நான் கேள்வியுற்றதே இல்லை. அது என்ன ? என்றேன். -

‘இளும் உணவு தேவதூதர்களின் ஏற்பாடாகும். குடிப்பு வர்கள் அதிக பீர் வாங்குவதற்காகவும், குடி போதை பெருமவிருக் கவும், யோக்கியமான மதுக்கடைக்காரர்கள் அதைக் கண்டுபிடித் தார்கள். அதன் மூலம் குடிப்பவர்கள் தொல்லைகளாக மாதுவது தவிர்க்கப்பட்டது. நான் சிறுவனுக இருந்த காலத்தில், பத்து சதம் வைத்திருந்த எவனும் ராஜா மாதிரி நடக்க முடிந்தது. ஒரு பீர் வாங்கிவிட்டு ஒருவன் சாப்பாட்டிலே புகுந்தால், மதுக்கடைக் காரன் சிறிது சந்தேகப்படுவான். ஆளுல், நாம் வயிற்றைச் சரிப் படுத்தி, இரண்டாவது பீர் வாங்கியதும், அந்தக் கட்ையின் அதிதி ஆகிவிடுவோம். பிறகு மூக்கு முட்டச் சாப்பிடலாம். ‘

“ அவர்கள் என்ன தந்தார்கள் ?” தாத்தா துக்கமும் ஆவலும் கலந்த புன்னகை புரிந்தார். பிறகு ஆனந்தமாய் உதடுகளே நக்கிஞர். - ‘ எல்லாம்தான். பெரிய கண்ணுடி ஜாடி நிறைய ஊறி பன்றிக் கால்கள் இருக்கும். உப்பு நீரிலிருந்து அவற்றை எடுப்ப தற்காக மரக் கத்திரிக்கோலும் உண்டு. ஒரு கப்பரையில் நன்மூக வேக வைத்த முட்டைகளும், இன்னொரு கப்பரையில் பச்சை வெங்காயமும் இருக்கும். சில் கடைக்காரர்கள் சூடாகப் பொசித்த மாட்டுக் கறி தந்தனர். சிலர் ஆறிய நாக்கும், ஆறிவிட்ட இறைச்சியும் தருவர். எனினும் அவர்கள், யார் உயர்ந்த இளும் உணவு தரமுடியும் என்பதில் போட்டியிட்டார்கள். வழக்கமாக, லைலாமியில் ஒரு பெரிய துண்டும், ஒரு கிண்ணம் முல்லிகனும், ஜெர்மானியர் விரும்பும் பலரக உணவுகளும்-ஸ்ார்டைன், ஹெர்ரிங் மீன் வகைகள், சக்ல வித சீஸ்களும்-கிடைக்கும். விஸ்கி குடிக்கும் ஒருவன் இந்தச் சாப்பாட்டு வகை முழுவதையும் எளிதில் தின்னலாம். பீர் குடிப்பவன் மெதுவாகத் தான் சாப்பிட முடியும். பீர் உணவு வகைகளுடன் கலக்க வேண்டுமே.

‘மது விலக்கு வந்தது. எல்லோரும் திருட்டு பீரும், தொழு வத்தில் காய்ச்சும் விஸ்கியும் கண்டுபிடித்து, மக்களைத் தள்ளாடி விழும் குருடர்களாக மாற்றத் தொடங்கிஞர்கள். உடனே நாடு செத்தது. சட்ட பூர்வமான விஸ்கி என்றாவது ஒருநாள் திரும்பி வரலாம். ஆனால், இலவச உணவு எதுவும் இனிமேல் கிடைக்காது