பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை டிசியல்

“நல்லது. கொஞ்சம் சாப்பிடு. நான் உனக்கு இத்த இடத்தைச் சுற்றிக் காட்டுவேன். நாம் முன் யோசனையோடு ஒன்றிரு நாய்களையும், ஒரு துப்பாக்கியையும் நம்முடன் கொண்டு சென்றால், உனக்காக ஒரு பெஸண்டை முன்னுல் நிறுத்தக்கூடும்’ என்று மிஸ்டர் ஹோவார்ட் கூறினர்.

நான் சிறிது உணவை விழுங்கி விட்டு, வீட்டை ஆராயப் போனேன். ப்ெண்களுக்கு நல்லதாக விளங்க முடியாத வகையைச் சேர்ந்தது அந்த வீடு. நான் ச்ொல்வதன் பொருள் உமக்குப் புரிந் திருக்கலாம். உலகத்தில் வேறெதையும் விட், குதிரைகளும் துப்பாக்கிகளுமே மிக முக்கியமானவை என்று கருதிய ஐரிஷ் பணக்கார வர்க்கத்தில் வந்தவர் ஹோவார்ட். அவ்விட்டின் ஆறைகள் மிகப் பெரியன. அவற்றில் குதிரைகளின் படங்களும், வேட்டைக் காட்சிகளுமே நிறை ந் து_ கிடந்தன. குடும்பு ஒவியங்கள் ஒரு சிலவும் தென்பட்டன. பெண்கள் எல்லோரும் அழகாகவும், ஆண்கள் அனைவரும் நன்கு உண்டு வளர்ந்தவர் கனாகவும் தோன்றினர். -

அலமாரிகளிலும் கண்ணுடிப் பெட்டிகளிலும் பதார்த்தம் திணிக்கப்பட்ட பறவைகள் - பெஸண்ட் முதல் பொன்பறவிை: வரை, காடை முதல் வான்கோழி வரை-நிறைந்திருந்தன. சுவர் ஆளில் நரித்தோல்களும், வால்களும் மிகுதியாகக் காணப்பட்டன. இந்த வட்டாரம் நீரி வேட்ட்ைக்குப் பிரசித்தமானது தான், குதிரைகள், பசுக்கள், காளைகள் பல நீல ரிப்பன்கள் பெறும் சித்திரங்களும் இருந்தன. மிஸ்டர் ஹோவார்டின் உயர்தரக் கால்நடைகள் எல்லாம் நீலம் பெறத் தவறிவிட்டால் தற்கொலே செய்து கொள்ளும் போலும்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் சவாரிக்குரிய பொருள்களேசேணம், பூட்ஸ், இடைவார், குட்டைச் சவுக்கு, குதிமுள் எல் லாம்-கிடந்தன. தோல் சாமான்கள், கை மெழுக்குற்ற தரை களைப் போலவே, பழமையும், பழகிய மென்மையும் பெற்றிருந் தன. நல்ல புகையிலே, சேன மெழுகு, எண்ணெயிட்ட துப் பாக்கிகள் ஆகியவற்றின் அருமையான வாசனை நிலவியது சுவர் கள் பூராவையும் மறைத்து நின்ற அலமாரிகளில் நூற்றுக் கணக்கில் திணித்து வைக்கப் பெற்ற, தோல் பைண்டு செய்த பழைய புத்தகங்களின் தன் மனமும் கலந்திருந்தது

எங்கும் துப்பாக்கிகள் இருந்தன-புரட்சிகரமான மஸ்கட், சண்டை போடும் பிஸ்டல், நவீன ரைபிள், கைத்துப்பாக்கிகள் எல்லாம் சுவர்களில் தொங்கின; மூலைகளில் நின்றன ; ஹாலில் உள்ள சிவப்புத் துணி விரித்த பெட்டிகளில் கிடந்தன. சில துப்பாக்கிகளுக்கும், சீனத்துச் சிங்காரப் பொருள்களுக்கும் அருகே மலர்கள் நிறைந்த பெரிய வெள்ளிக் கிண்ணங்கள் இருந்தன. அவற்றில் சிவப்பு, மஞ்சள் ரோஜாக்களே அதிகம் காணப் கட்டன. சாப்பிடும் இடத்தில் உள்ள நாற்காலிகள் மட்டுமே மெரு