பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்கள் ஒருவனை தொல்லையிலிருந்து காப்பாற்றும் 4a

மீது என் கைகள் வேதனைப்பட்டன. ஆயினும் நான் நேரிய நல்லெண்ணத்தோடு என் முதுகை வளைத்து உழைத்தேன். அதே சமயம், தனக்குத் தானே பேசிக் கொள்வதுபோல் தோன்றிய தாத்தாவின் பேச்சையும் கவனித்தேன்.

மீன்பிடிப்பில் முக்கியமானது, எவ்வளவு மீன்களை, அல்லது எந்த ரகமான மீன்களை நீ பிடித்தாய் என்பது அல்ல. மீன் பிடிப்பையே தலையாய தொழிலாகக் கொள்வது என்பது, என்னைப் பொறுத்த வரையில், கால விரயமே யாகும். ஏனெனில் மீன்கள் வெறும் மீன் மட்டுமேயாம். அவற்றினின்றும் ஏகப்பட்ட வேலை செய்யலாம் என்று கிளம்புகிற போது, அதனுடைய முக்கியத் துவத்தை நீ இழந்து விடுகிறாய்.

நீரின் அடி ஆழத்தில், நீ காணமுடியாதபடி, இருக்கிற மீன் மண்ணகத்தில் அமைதியின் ஒருவகைச் சின்னமே யாகும் ; உனக் கென அமைந்த நல்லெண்ணமும் கூட. மீன் பிடிப்பு, மனிதன் சிந்தனை செய்வதற்குச் சிறிது நேரம் அளிக்கிறது. அவன் எண்ணங்களைத் திரட்டி, அழகாகவும் ஒழுங்கான முறையிலும் சீர்ப்படுத்துவதற்கு அவனுக்கு அது வாய்ப்புத் தருகிறது.

‘ துண்டிலில் கவர்ச்சி தரும் இரையை மாட்டி, நங்கூரம் பாய்ச்சியதும், ஒருவனின் சிந்தனைக்குக் குறுக்கே வர எதுவுமில்லை. அவ்வப்போது மீன் வந்து கவ்வுவது குறுக்கிடலாம். ஆளுல் உணர்ச்சிகள் பெற்ற மடையன் கூட, தன் எண்ண ஓட்டத்துக்கு ஊறு செய்யாமலே, மீனைப் பிடித்து இழுக்க முடியும். ஆட்ட மாகவும் வேட்டையாகவும் மீன் பிடிக்கையில் இது சரிப்பட்டு வராது என்று கூற விரும்புகிறேன். அதற்கு ஏகப்பட்ட எண்ண ஒருமைப்பாடும், சிறிது திறமையும், அதிகப்பட்ச உழைப்பும் தேவை.

  • உன் மூளைக்கு ஒய்வுச் சிகிச்சையும், உனக்கு விடுமுறையும், ஒருவன் அடையக்கூடிய சகலவித அனுபவங்களும் பெறுவதற்கு, இப்போது நாம் செய்து முடித்தது போன்ற மீன்பிடிப்பை நீ மேற்கொள்வது நல்லது. இப்படி இந்தப் படகில் அமர்ந்துவிட் டால், உன்னை உன் அம்மாவோ, பாட்டியோ எட்டிப் பிடிக்க முடியாது. இடையே டெலிபோன், தபால் போக்குவரத்து, ரேடியோ அல்லது மோட்டார் வசதி எதுவுமே கிடையாது. உன்னையும் மீனையும் தவிர வேறு ஒன்றுமே யில்லை. இந்த இன மீன்களோ சுத்த முட்டாள்கள். ஆகவே, நீ தூண்டிலில் ஒரு இருலைக் குத்தி நீரில் போடுகிறாய், மீன்_வந்து கடித்தால் அதை உள்ளே இழுக்கிறாய். எதுவும் கடிக்காது போயினும் நஷ்டமில்லை. வெம்பரப்பில், கடற்பறவைகளின் ஒசையைத் தவிர சதா அமைதியே நிலவும் இடத்தில், அற்புதமாக நாளைக் கழிக்கும் பேறு கிட்டும்.

எப்போதாவது ஒரு முறை, சகல குழப்பங்களிலிருந்தும் விடுபட்டுச் செல்ல ஒவ்வொருவனும் விரும்புவான். அதைச் செய்