பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம் 47

யாரும் வேலை செய்வதில்லை. செவ்வாயன்றாே எல்லாச் சிறுவர் களும் போய்விடுகிரு.ர்கள். பெரியவர்கள் மட்டுமே தங்கியிருப்பர். நீல மீன் மேல் பகுதியிலிருந்து கவனித்துக் கொண்டு, மனிதர் களோடு உறவாட வந்து சேரும். அதற்குக் கோடை யாத்ரிகர் களைப் பிடிக்காது. வடகீழ்க் காற்றை மதித்து, கொஞ்சம் மழை அல்லது சூறையைப் பொருட்படுத்தாது இருப்பவர்களை நீல மீன் கள் விரும்புகின்றன.

நீல மீன் விஷயத்தில் நாம் செய்யப்போகும் முதல் காரியம் அவற்றை நிறையவே எளிதில் பிடிப்பதுதான். அப்பொழுதுதான் நீ அவற்றை மதிக்கக் கற்றுக்கொள்வாய், நிலத்துள் சதுப்பை நாடி அவை வர இன்னும் நாளாகவில்லை. ஆகவே நாம் செல்வர்கள் செய்வதுபோல் நீல மீன் பிடிப்பதற்காகப் படகில் செல்வோம். படகு அவற்றைக் கொல்லட்டும். கரைப் பாதுகாப்பாளரிடம் எனக்குத் தொடர்பு உண்டு. நாம் ஸ்ெளத் போர்ட் போய், அங்கிருந்து அதிகாலையில் காப்டன் வில்லிசுடன் கிளம்புவோம்.” நாங்கள் படகில், காஸ்வெல்லைக் கடந்து, லெளத் போர்டி விருந்து கிளம்பி, ஃபிரையிங்பான் ஷோல்ஸ் ‘ எனும் இடத்தைச் சுற்றிச் சென்றாேம், படகோட்டி பெயரை மிட்யெட் என்றே கூறவேண்டும். அநேகமாக கரைக் காவலர் அனைவரும் ஹாட்ட ராஸ் அருகிலுள்ள ஆக்ரகோக் தீவிலிருந்து வந்தவர்கள்தாம். அங்குள்ள எல்லோருக்கும் மிட்யெட் என்றே பெயர். அவர் சிறிய படகைக் கரையின் ஒரமாகவே செலுத்தியதால், நாம் இடது கையால் மணலைத் தொடலாம் ; வலப்புறம் ஆழமிகுதி தென்பட்டது. -

நீர் பெர்முடாவில் உள்ளது போலவே குளிர் நீலமாய் விளங் கியது. மணல் வெண்மையாக இருந்தது. மணி மிதவை சற்று பின்தள்ளி, சோக ஒலிகளை எழுப்பியவாறு கிடந்தது. தீபக்கப்பல், தன்னுள் தங்கியிருந்த ஆட்களைப் போலவே, தன்னந் தனியாய்க் காட்சி தந்தது. கல் பறவைகள் கிரீச்சிட்டு வளைய வந்தன. கேனட் பறவைகள் இரை தேடி நீர் மீது திரிந்தன. மணல் மேடு களிலிருந்து தள்ளி நீரில் பெரிய சிவந்த, மென்ஹேடன் மீன் கூட்டங்கள் மொய்ப்பது தெரிந்தது. இவற்றை நாங்கள் போகீஸ் என அழைப்போம். மீன் பிடிக்கும் படகினர் மீன் செத்தை உரம் செய்வதற்காக இவற்றை ஏகமாய்ப் பிடிப்பர்.

இங்குதான் மாக்கரெல் (அவற்றை நாங்கள் ஸ்பானிஷ் மாக்க ரெல் என்போம்), ராஜமீன் என்கிற குதிரை மாக்கரெல் மீன்கள் வசித்தன. ஆழமற்ற நீர்ப்பரப்பில் வசிக்கும் சிறு முல்லட்களையும், மணல் மேடுகள்ன் ஓரங்களில் உள்ள இால்களையும் தின்பதற்காக நீல மீன்களும் கடல் ட்ரெளட்களும் இங்கேதான் வரும்.

“ இது முட்டாள்தனமான மீன்பிடிப்புதான். ஞானமோ, திறமையோ இதற்குத் தேவையில்லை. இதற்கு வேண்டியதெல் லாம், ஒரு கம்பு, கொஞ்சம் கயிறு-ஒரு முள், முள்ளை மின்ளுேமீன்