பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்டம்பர் கீதம் தி

மீது வேக வைத்தார். அவற்றின் சருமம் கொப்பளித்து, வெடித்து, பொன்னக மாறிப் பின் கறுப்பாயிற்று. உள்வெள்ளை புலணுகி, கொழுப்பு சிடுசிடென ஒலித்து நெருப்பில் விழும்வரை அப்படியே விட்டு வைத்திருந்தார். முடிவில் அவற்றை எடுக்கையில் அவர் தோசைத் திருப்பியை உபயோகிக்க வேண்டியிருந்தது. அவை: உதிர்ந்து விடும் அளவுக்கு மென்மை பெற்றுவிட்டன. ஒரு மீனுக்கு அரை ராத்தல் எனும் விகிதத்தில் அவற்றை அவர் வெண்ணெயில் தோய்த்தார். மேலே (Vinegar) புளிக் காடியை ஊற்றினர். மிளகைத் துரவிஞர். ஒரே வேளையில் தான் சுமார் நான்கு சாத்தல் மீன் தின்றேன். -

பின்னர் இலையுதிர்ப் பருவத்தில், நிலையாக வத்த வட காற்று: கடற்கரையில் பள்ளம் பறிக்கத் துவங்கியதும், பிற்பகல்நேரம் குளிர் மிகுந்ததாகி விட்டதும், ஒரு நாள் சிற்றுண்டிக்குப் பிறகு தாத்தா சொன்னர், உண்ம்ையான மீன் பிடிப்புக்கு உரிய காலம் இதுதான் ‘ என்று. -

‘ நாம் கார்ன்கேக் செல்வோம். சிறு சிறு முரசுமீன்கள் பசி யோடிருக்கின்றன; மணலில் உள்ள .ெ த ள் ளு ப் பூச்சிகளால் வயிற்றை நிரப்பிக்கொண்டு அவை சதுப்புகளில்ே கிடக்கின்றன. என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு ஏற்ற மீன் பிடிப்பு இதுவே. இது கொலை அல்ல-மீன் பிடித்தல் தான்,’ என்றும் அவர் சொன்னர்.

பெருந் துரண்டில்கள் இரண்டை வீட்டினுள்ளிருந்து தேடி எடுத்தார். படுக்கையறையிலிருந்து பெரிய தளவாடப் பெட்டியை எடுத்தார். நாங்கள் கடற்கரைக்குச் சென்று, உப்பு முல்லட் மீன்கள் சில வாங்கினுேம். அவை பெரியதாய், கனமாக உப்புப் படிந்து இருந்தன. எங்களுக்குரிய நேரத்தை நாங்கள் தேர்ந்து எடுத்தோம். அதிகாலை வேளை, அல்லது பிற்பகலின் பின் நேரம் தவிர்ந்த இதர சமயங்களில் மீன் பிடிப்பதிலோ, வேட்டையாடு வதிலோ பயன் கிடையாது என்று தாத்தா சொன்னர். ஏனெனில் மீனுக்கும் முயலுக்கும் கூட வெயில் வேளையில் பரப்ரத்து அலேயக் கூடாது என்ற உணர்வு உண்டு என்றார்.

அன்று மந்தாரமுள்ள, மோசமான நாள். துரை பறந்தது. கடல் பறவைகள் தண்ந்த குரலில் முனங்கிக் குறை கூறின. அப் பொழுது மாலை சுமார் ஐந்து மணி. ஸ்வெட்டர் தேவைப்படும் அளவுக்குக் குளிரடித்தது. எ ன து வெறும் கால்களில் பட்ட தண்ண்ரீர் குளிர்ச்சியாக இருந்தது. முள்ளில் இரை இல்லாமலே, துரண்டிலே எறிவதற்கு என்க்குக் கற்றுக் கொடுப்பதில் ஆரம்ப நேரத்தைச் செலவிட்டார் தாத்தா. அவர் செய்த விதத்தில் ஆது எளிதாய்த் தோன்றியது. நர்ன் செய்த முறையில் ஆசாத்திய மானதாக விளங்கியது அது. அவர் தூண்டிலே எடுத்துக்கொண்டு, முழங்கால் அளவு தண்ணீருள் சென்று, கம்பைத் தோளுக்கு மேலாக முதுகுப்புறம் இழுத்து, சுமார் நாலு அடிக் கயிற்றை ஒட.

4