பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

oy

ந்து, சுமார் ஐம்பது கெஜ உயரம் மேலே ஏறுவ

ல்ல ; உறைந்து கடினமாகிவிட்ட மணலேயாகும்.

அது பிரமாதமான குடிசை அல்ல. குளிக்குமிடம், நன்கு கட்டப்பெருத அடுப்பு, உட்காரும் அறை, தீ எரியுமிடம் ஆகியவை இருந்தன. தீ எரிக்கும் இடம்தான் அதற்கு மதிப்பு தந்தது. கட்டைகளை நேரே சிம்ப்ளி'க்குள்ளாகக் கொண்டு போவது போல் அது வேகமாக இழுத்தது. சிம்னி என்பதை தான், பெரியவனுகிற வரையில் சிம்ப்ளி என்றே உச்சரித்தேன். இப்போது கூட அப்படித்தான் எண்ணுகிறேன்.

விடாய், கோட்டையாய், புகலிடமாய் விளங்கியது இந்த இடம். இருண்.--இரவில் அக் கடற்கரையிலிருந்து வீடு திரும்பும் நிலை என்கின்சில் தெளிவாகப் பதிந்துள்ளது. கடலலை பேய்த்தன மாய், கடுகடுப்பாய் ஒசையிட்டு மோதும். காற்று வலுக்கும்போது வெறித்தனமாய் கோபத்தோடு துரை எற்றிச் சாடும். கனத்த கரிய ரப்பர் பூட்ஸ் அணிந்த பாதங்கள் மணலுள் ஆழப் புதையும். நீரோரத்தில் உள்ள இறுகிய ஈர மணலிலிருந்து நடந்து, செங்குத் தான கரையின் ஆரம்ப ஏற்றத்தில் ஏற ஆழமான தளர் மணலில் சிரமத்தோடு அடி எடுத்து வைக்கும்பொழுது, பாதங்களைப் பலத்த முயற்சியோடு தான் இழுத்து எடுக்க வேண்டியிருந்தது. இயல்பாகவே நம்மிடம் கனத்த தூண்டிலும், கனமான சுழல் வட்டும். ஒரு தளவாடப் பெட்டியும் இருக்கும். ஒரு சுமை மீன் களையும் இழுத்து வருவோம். ஆரம்பத்தில் ஆங்கோவிச் சிறு மீன்களின் கனமே இருப்பதாகத் தோன்றும் அந்தச் சுமை, நாம் வீடு சேருவதற்குள் மார்லின் மீன்கள் மாதிரி அதிகம் கனமேறிக் காட்டும். -

நாலு அவுன்ஸ் கனமுள்ள குண்டையும், பெரிய முல்லட் துண்டையும் இணைத்த பளுவான தூண்டிலே எறிந்ததல்ை தோள் பட்டை எல்லாம் வலி பரவி நிற்கும். தண்ணீரில் நடந்ததாலும், பிறகு தூண்டிலே இழுக்கப் பின்னுக்கு நகர்ந்ததலுைம் கால்களின் பின்புறத்தில் நோவு நீடிக்கும். குளிர்ந்து, உப்பு நீரால் சுருங் கிச் சிவந்துள்ள விரல்களில் வலிப்புகள் இருக்கும். மூக்கு சிவப் பாகி, நீரை வடிக்கும். எவராவது காதின் ம்ேலே அடித்தால், அது இற்று விழுந்துவிடும். பிசுபிசுக்கும் ரப்பர் பூட்சினுள் பாதங்கள் உறைந்து போயிருக்கும். நம் உடம்பு முழுவதும் உப்பும் மணலும் அப்பியிருக்கும்.

எப்படியோ போராடி, இருட்டில் செங்குத்தான படிகளை ஏறிக் கடக்கிருேம். மரக்கட்டைத் தாழ்ப்பாளைத் தள்ளியதும் கதவு திறந்துகொள்ளும். உள்ளே நுழிையும் முதல் நபர் விளக்கு களே ஏற்ற வேண்டும். பழமையான, புகை கக்கும் மண் எண்ணெய் விளக்குகள் அவை. யார் தீ மூட்டுவ்து என்ற் சண்டை எதுவும்