பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட்

பிற்பகல் முதல் திங்கட்கிழமை அதிகாலை வரையில்-அன்று பொழுது புலரும் முன்பே தாத்தா என்னைப் படுக்கையிலிருந்து வெளியே இழுப்பார் ; எனது விரல் நக மெல்லாம் சுத்தமாக இருக் கிறதா என்று கவனித்து, கண்ணியம் பற்றி உபதேசிப்பார் ; அதுவரை நான் பிரமாதமான ஆனந்தம் உடையவன் தான். r

நான் முன்னுல் குறித்ததுபோல, இது வேடிக்கையானது தான். மீன்களை என்னல் ஞாபகப்படுத்த இயலவில்லை. கிறிஸ் எனும் கிரேக்கனும், கூசாது ஏசுகின்ற கிழவியும், காது வளையங்கள் அணிந்த போர்ச்சுகீசியனும் என் நினைவில் பசுமையாக நிழவிடு கிறார்கள். தீயினல் பிரகாசமுற்ற தாத்தாவின் முகம் எப்படி விளங்கியது,-ஒர்புறம் செக்கச் சிவந்தும் மறுபக்கம் கருமையாய் நிழலிட்டும் தோன்றிய காட்சி-என் நினைவில் எழுகிறது. புயலி விருந்து எங்களைப் பாதுகாத்த, உறுதியான மங்கல் வெண்ணிறப் பலகைகளை அடித்துச் சாடிய காற்று எப்படி ஒசையிட்டது என்பது ஞாபகமிருக்கிறது. அன்று முதல் இன்று வரை, நான் எப்பொழுது தீ மூட்டினலும் சரி, தாத்தாவை உருவாக்கிய தாடி, பூர்பான் விஸ்கி, புகையிலே உப்பங் காற்று, நெருப்பு ஆகியவற்றை கண் ணெதிரே காணுமல்-அவற்றின் மணத்தை ஒரு சிறிது நுகராதுஇருப்பதில்லை. சிலர் என்னை நெருப்புப் பூச்சி என அழைப்பது இதனால்தான் போலும் ! -

6

உண்மையான கனவான் மிஸ்டர் ஹோவர்ட்

அவ் வருஷம் நன்றி அறிவிப்புக்கு முந்திய வாரம், எங்கள் குடும் டத்தோடு சில நாள் தங்குவதற்காக தாத்தாவின் சிறந்த நண்பர் களில் ஒருவர் மேரிலாந்திலிருந்து வந்தார். ஆரம்ப முதலே அவரை நான் மிகுதியாக விரும்பினேன். அவர் தாத்தாவைப் போலவே இருந்தது காரணமாக இருக்கலாம். தொங்கு மீசையும், உறுதியான உடலமைப்பும் பெற்றிருந்தார் அவர். புகைக்குழாய் உபயோகித்தார். வளர்ந்து பெரியவளுகி விட்டவனைப்போல் என்னை அவர் மதித்தார். நான் செய்து கொண்டிருந்தவைகளில் அக்கறை காட்டினர். எனது துப்பாக்கியை மெச்சினர். பால்டி மூருக்கு வெளியே அமைந்திருந்த அவரது பெரிய பண்ணை யிலுள்ள நாய்களையும் குதிரைகளையும் பற்றி என்னிடம் அதிகம் பேசினர்.