பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

கிறிஸ்துமஸ் நெருங்கி வந்தது. ஒரு நாள் என் பாட்டி மின் லாட்டி, காப்பி வழங்கிய பிறகு, வாயைச் சுளித்தாள். வீட்டில் ஆண்கள் என்ற பெயருக்குத் தகுதி படைத்தவர்கள் இருந்தால் அவர்கள் வெளியே போய் காட்டு வான்கோழிகள் சிலவற்றைப் பிடித்து வரட்டும் என்று சொன்ஞள். இந்த வருஷம் இறைச்சி விலை பயங்கரமாக ஏறிவிட்டது. ஒரு ராத்தல் பத்து சதம் என்ற வீதத்தில் பணம் கொடுத்து நான் வான்கோழி வாங்கப் போவ தில்லை வேண்டுமானல் அதை வேட்டையாடி வாருங்கள். இல்லையெனில் இந்த வருஷம் அது வேண்டாம் ‘ என்று பாட்டி குறிப்பிட்டாள். - -

தாத்தா காப்பிக் கோப்பைக்கு மேலாக என்னை நோக்கிக் கண் வெட்டினர். தான் புகை பிடிக்க வேண்டியிருப்பதால், திண்ணைக்குச் சென்று மீதிக் காப்பியைப் பருகப்போவதாகக் கிளம்பினர். வீட்டினுள் புகை பிடிப்பதுபற்றி மிஸ் லாட்டிக்கு திட்டவட்டமான கருத்துக்கள் உண்டு. அவள் புகைப்பது விதி விலக்கு. அவளுக்கு ஆஸ்துமா இருந்தது. அவள் நெஞ்சுவலிக்கு மருந்தாக கியூப்ப் சிகரெட்டுகள் பிடித்தாள். நானும் மிகச் சிறு பிராயம் முதல் கியூபப் பிடிக்கக் கற்றுவிட்டேன். * * * * **, தனது நாற்காலியில் அமர்ந்து, புகையிலையைப் பற்ற வைத்ததும், தர்த்தா சொன்னர் : ஒரு பெண்பிள்ளையோடு வாழும் ஆணின் பாடு சிரம்ம் தான். இவளேயும் இவள் போஷிப்பையும் விட்டுவிட்டுச் சிறிது காலம் வெளியே போவது தான் நல்லது. இது கடுமையான் வாழ்க்கை, பையா ; இதை நீ சிக்கிரமே உணர்வது நன்று. காட்டில் ஒரு வாரம் கழித்துவிட்டு நாம் இப்பொழுதுதான் இங்கு வந்தோம். ஒவ்வொரு நாளும் உதயத்துக்கு முந்தி எழுந்து, நமக்கு வேண்டிய சாப்பாட்டை நாமே தயாரித்து, நாள் பூராவும் நடந்து திரிந்து, மான் வருகிறதா என்று பார்த்தபடி உட்கார்ந்து குளிரில் விறைத்து, கஷ்டப் பட்டோம். இப்போது நாம் மீண்டும் அதே இடத்துக்குப் போய் அவற்றை எல்லாம் திரும்பவும் செய்யவேண்டும். அடா, அடா : பெண்கள் நியதியில்லாதவர்கள். நீயும் நானும் வான்கோழி வேட்டைக்குப் போகவேண்டும் என்று நாளுக ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், நம்மை வீட்டில் நிறுத்துவதற்கு அவன் அறுபது காரணங்கள் கண்டுபிடிப்பாள்.’ -