பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

தாத்தா குழாயிலிருந்த சாம்பலைக் கீழே கொட்டிவிட்டு, சிரமத்தோடு மாடிக்குச் சென்றார், ஐந்து நிமிஷங்களுக்குப் பிறகு திரும்பி வந்தார். விசித்திரமான ஊதுகுழல் ஒன்றும், சுண்ணும்புக் கட்டி ஒன்றும் அவர் கையில் இருந்தன. விடார் மரத்தாலான ஊது குழல் மீது சுண்ணும்பைத் தடவினர் அவர். சில கட்டை களே அசைத்தார். பெட்டை வான்கோழி கத்துவது போன்ற தனிரக ஓசை அதிலிருந்து எழுந்தது. பிறகு, அந்த வாத்தியத்தில் வேறு என்னவோ பண்ணிஞர். ஆண் பறவையின் கோரமான கூச்சல் பிறந்தது. பின்னர், ஊதுகுழலைச் சட்டைப் பையில் போட்டுவிட்டு. அவர் தன் கடிகாரத்தை எடுத்தார்.

  • நாலு நிமிஷம் பிடிக்கும். அஞ்சு கூட ஆகலாம் ‘ என்று: அவர் முனங்கிஞர். என்ன விஷயம் என நான் கேட்கவும், அவர் சம்கா தலையை ஆட்டி காத்திருக்கும்படி சொன்னர்.

என்னிடமும் ஒரு கடிகாரம் உண்டு. அதை எடுத்துப் பார்த்த படி நானும் காத்திருந்தேன். சரியாக நாலரை நிமிஷங்களில் உாமும் பீட்டும், வீதி வழியே அசுர நடை போட்டு வேகமாக வந்தார்கள்.

“ என் கணிப்பு ஏறக்குறைய சரிதான். நாலு அல்லது அஞ்சு திமிஷமாகும் என்றேன். இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை நீங்கள் பகிர்ந்து விட்டீர்கள். உங்களுக்கு வயதாகி விட்டதாகத் தோன்றுகிறது. முன்பெல்லாம் நான் வான்கோழியின் கூச்சலை எழுப்பியதும், நீங்கள் கணக்காக இரண்டு நிமிஷங்களில் இங்கு வந்து நிற்பீர்களே ‘ என்று தாத்தா சொன்னர்.

டாமும் பீட்டும் நகைத்தனர்: நீங்கள் புறப்படத் தயார் என்றால், நாங்களும் தயார்தான். பையனையும் காரையும் கொடுங்கள். ஒரு மணி நேரத்தில் கிளம்புவதற்குச் சித்தமாகி விடுவோம். கூடாரம், துப்பாக்கி, சாப்பாடு, துப்பட்டி, குண்டுகள் முதலியவற்றை காரில் போடும் வேலை தவிர வேறு ஒன்றுமில்லை : எனருாகளா

  • காரைத் தயார்ப்படுத்துங்கள். அவசரமாகப் போனல், இருட்டுவதற்குள் நாம் அந்த இடம் சேர்ந்து விடலாம். காலையில் விழித்தெழ வசதியாக இருக்கும். வான்கோழி தேவை என்று மிஸ் லாட்டி கேட்கிறபோது, அவளுக்கு ஏமாற்றம் அளிக்க நான் விரும்பமாட்டேன் என்று தாத்தா சொன்னர்.

இந்த உரையாடலின் போது நான் ஒரு வார்த்ன்த கூடப் பேச வில்லை. ஏனெனில் நானும் உடன் செல்ல வேண்டுமா, இல்லையா என்பது பற்றி எவரும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. அண்மையில் ஒரு மானச் சூட்டதிலிருந்து, நானும் தொழில் நிபுணனாகி விட்ட தாகவே கருதி வந்தேன். ஆனல் தாத்தாவை நர்ன் க்ட்டாயப் படுத்த முடியாதே அவரும் பீட்டும், டாமும் பாட்டியும் எல்லோரும் கூடி என்னைச் சித்திரவதை செய்வதற்கென்றே ஏதோ சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத்தான் எனக்குத் தோன்றியது.