பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கொண்டால், நான் அவன் காட்டிலுள்ள பறவைகள் பிராணிகளை, தியாயமான வரம்புக்கு உள்ளாகும்படிச், சுடுவதில் மகிழ்ச்சி அடைவேன். ஆளுல் என்னிடம் ஒரு உல்லாசப் படகு இல்லாத வரையில், நான் ஃபிரெஞ்சு ரிவீராவில் வசிக்காத வரை, அவன் என்னே அவ்விதம் கோருவதற்கு வாய்ப்பு ஏற்படப் போவதேயில்லை. தான் அவனுடைய நிலத்தில் அடி எடுத்து வைக்கமாட்டேன். ஏனென்றால், ஒவ்வொரு அங்குலமும் பிரத்தியேகமானது ‘ என்று அம்பலப்படுத்துகிறது. ஆனல் ரஸ்தாவுக்கு மறுபுறத்தை அவன் வாங்கிவிடவில்லை. அது அவனுக்குச் சொந்தமல்ல. அது பொது இடம். ஏதாவது வான்கோழி மடத்தனமாக அந்த ரஸ்தாவைக் கடந்து வந்தால், நாம் சட்டத்தை மீருமலே அதைச் சுடமுடியும் : அப்படிச் சுடுவதற்கு நம்மிடம் லைசென்சு இருக்கிறது. இது எவருடைய தரும, நியாய அல்லது சட்ட உணர்வையாவது பாதிக்குமென்றால் அவர் அதை இப்போதே சொல்லிவிடலாம் என்று தாத்தா கூறினர். -

டாமும் பீட்டும் சிரித்தனர் என்பதை அவர்கள் கழுத்தின் சருமத்தில் ஏற்பட்ட சுருக்கத்தினுல் நான் காணமுடிந்தது. வான்கோழிகள் இல்லாமல் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு தினம் எங்கள் வீட்டில் எந்த வருஷமும் கழிந்ததில்லை என்றே தோன்றியது. நான் பிறப்பதற்குப் பல வருஷங்களுக்கு முன்னிருந்தே அம்மூவரும் குறிதவருது வேட்டையாடி இன்புற். றிருக்கிரு.ர்கள் என்று கருதினேன். ஆனல் இந்த ரக வேட்டையில் இதுதானே எனக்கு முதல் அனுபவம்.

ஒரு மணிக்கும் அதிகமாகவே நாங்கள் காரில் சென்று, கோடிஸ்வரனின் இடத்தை அடைந்தோம். ரோட்டின் ஒரு புற்ம் நெடுகிலும் உயரமாக வேலி கட்டப்பட்டிருந்தது. பத்து மரத்துக்கு ஒரு தரம் வேட்டையாடக்கூடாது என்ற் அறிவிப்பு பெரிதாகக் காணப்பட்டது. சிறு களிமண் ரஸ்தா ஒன்றில் திரும்பி நாங்கள் மறுதிசையில் ஆரைமைல் தூரம் பேர்ஞ்ேம். முகாமிடும் இடம் ஒன்றை அடைந்தோம். சென்ற வேட்டையின் போது தாத்தா தேர்ந்தெடுத்த இடம் மாதிரியே இதுவும் இருந்தது. அவர் முகாமிட்ட இடங்களில் எல்லாம் தனது முத்திரையை இட்டிருந்தார். அவற்றை விட்டு நீங்குவதற்கு முன் இடம் பூராவையும் சுத்தப்படுத்துவது அவர் வழக்கம் என்பை த அவை எடுத்துக் காட்டும். இதை நான் அறிவேன். சென்ற முகாமை நான் சுத்தப்படுத்தினேன். இறுதியில் அடுப்புக்கு வேண்டிய கற்குவியல் மட்டுமே ஒழுங்காக இருந்தது. மற்றவ்ை எல்லாம் எரிக்கப்பட்டன : அல்லது புதைக்கப்பெற்றன.

நாங்கள் வேகமாகக் கூடாரம் அமைத்து, விரைவாகச் சாப்பிட்டு, அவசரமாய்ப் படுக்கைகள் தயாரித்து, சடுதியில் உறங்கினேம். நான் தன்றாக உருண்டு புரண்டு துரங்கவில்லை; அதற்குள் பீட் என்னை உலுக்கி எழுப்பினன். அப்பொழுது