பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே 91.

பரிசுகள் ஆகா. ஒரு வீட்டுக்கு அமையும் கூரை மாதிரித் தான.

சுபிட்ச தாலமாயினும், மோசமான நாளானலும், கிறிஸ்து மலாக்கும் பிறந்த நாளுக்கும் நான் பரிசாகப் பெறுவது-ஐம்பது சதம் விலை மதிப்புள்ள சிறு_கத்தியாக இருந்தாலும் கூட-ஆடம் பரச் செலவுக்கு உரியதாகவே இருக்கும், அநேக சந்தர்ப்பங்களில் அதிக விலை பெறுமானமுள்ள பொருள்களையே நான் பரிசாக அடைந்தேன். பெரும் வறட்சி ஏற்படுவதற்கு முந்திய காலம் அது. வேடிக்கையாகச் செலவு பண்ணுவதற்கு ஒவ்வொரு வரிடமும் பணமிருந்தது. ஒவ்வொருவரும் என்று கூறும்போது, நான் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களேயே குறிப்பிடுகிறேன். ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் நாட்களில் விளையாட்டுத் துப்பாக்கி களும் சைக்கிள்களும் அவை போன்றவையும் கிடைத்தன், போகப் ப்ோக, வேட்டை பூட்ஸ், கத்திகள், கைக் கோடரிகள், பெரிய பைகள். பெரிய துப்பாக்கிகள் எல்லாம் கிடைத்தன. நீலநிற ஐவர் ஜான்சன் பைசைக்கிளும்_ஒரு பெரிய துப்பாக்கியும் கிட்ைத்த சந்தர்ப்பத்தையே அனைத்தினும் மிக உயர்ந்த நினைவுநாளாக நான் மதிக்கிறேன். .

பெரியவர்களுக்கென்று முக்கியமான பரிசுப் பொருள்கள் வாங்குவதற்காகச் சி ல் ல ைற க் கடைகளைச் சுற்றிவ்ருவது வேடிக்கையாக இருந்தது. ஆறுமாத காலமாகக் குடும்பத்தின்னர் நச்சரித்துக்_கேட்ட எதையாவது கொண்டு தருவார் என்று லான்டா கிளாஸை நாம் ஆவலோடு எதிர்பார்த்தது. முந்திய தினும் வேடிக்கை நிறைந்ததாகும். ஆனால் உண்ம்ைiான வேடிக்கை அப்புறம்தான், புது வருஷ நாளின் போதுதான் தொடங்கும். பள்ளிக்கூடம் இன்னும் திறக்கப்பட்டிராது. மரத்தடியில் கண்டெடுத்த சூறைப் பொருள்களே உபயோகிப் பதில் நாம் கவனம் செலுத்த முடியும்.

கிறிஸ்துமஸ் பெரிய மனிதர்கள் நிறைந்த திருநாளாகவே விளங்கும். அத்தைகளும், சின்னம்மாக்களும் அவர்கள் பிள்ளை களும் மற்றையோரும், அதிகமாக நகரங்களிலிருந்து நாட்டுப் புற்ம் வந்து சேரும் விருந்தாளிகளும் கூடிவிடுவர். அதனுல் சின்னப் பையன் சுத்தமான முகத்தோடும், நன்கு வளர்க்கப்படு வதைக் காட்டும் பாவனையோடும் திரியவேண்டும். அவர்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் நமது விரல் நகங்களில் மறுபடியும் அழுக்கேறுவதையும், தலைமுடி இயல்பாக வாரி விடாமலிருப் பதையும் வீட்டினர் அனுமதிப்பார்கள். அப்பொழுதுதான் சுயேச்சையான விளையாட்டு ஆரம்பமாகும்.

விடுமுறை காலம் எனக்கு அதிவிசேஷமானது. பள்ளிக்கூடம் முடிவுற்றதும், தாத்தா வசித்த சிறு நகருக்கு நான் போவேன். பள்ளிக்கூடம் மீண்டும் துவங்கும் தினத்துக்கு முந்திய நாள் வரை அங்கிருந்து திரும்ப மாட்டேன். இரண்டு வார காலம், பழைய