பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே ss.

அற்புதக் கட்டிகளாக உடையும் வேனிலா ஐஸ் துண்டுகள் ஆகிய வற்றால் தயாரிக்கப்படும்.

விடுமுறைக்காக ஆரஞ்சுப் பழங்கள் வந்து சேரும். இவை இதர காலத்தில் காட்சி தருவதில்லை. இவற்றின் பிசுபிசுத்த தோல்கள், நறுமணங்களின் கூட்டுறவுக்கு அதிகப்படியான நாற்றம் அளிக்கும். பழுப்பும் கருஞ் சிவப்பும் கலந்த பெரிய மலாகாத் திராட்சைகளும், வற்றிச் சுருங்கிய கொடி முந்திரிப் பழக் குவியல்களும் கிடைக்கும். அப் பழங்கள் பிசுபிசுப்பும் சர்க்கரைத் தித்திப்பும் பெற்று, பெரிய கோலிக் குண்டுப் பரும னிருக்கும். தாத்தா திராட்சை வற்றல்கள் மீதும் சிறிது பிராந்தி ஊற்றுவார். பிறகு அதற்குத் தீ வைப்பார். இதில் முக்கியமான விளையாட்டு யார் தீக்குள் கைவிட்டு, சூடுபடாம்லே ஒரு கொத்துப் பழங்களை அள்ளுகிரு.ர்கள் என்று பார்ப்பதுதான். `.

அப்புறம், கொட்டை தினுசுகள் நிறைய இருக்கும்-இங்கிலீஷ் வால்நட், தோடு உரித்த பீக்கன் , வழவழப்பான சதைப்பற்று உடைய பிரேஸில் கொட்டைகள், விசேஷமான இந்தத் தினுசை நீக்ரோக் கட்டைவிரல் என நாங்கள் கூறுவோம். அவற்றை அடுத்து, கடைகளில் வாங்கிய இனிப்பு வகைகள் காணப்படும். சிறுசிறு இலைவடிவ மிட்டாய்கள் பல நிறங்களிலும் இருக்கும். வரைகள் தீட்டிய கடினமான சர்க்கரைக் கட்டிகள், இவற்றின் நடுப்பாகம் மோசமான மென்மை பெற்றிருக்கும். நல்ல சுவை இராது. ஆயினும் இவை கண்ணுக்கு அழகாக விளங்கும். பன்றிக் கறி பற்றிய இனிய நினைவு கொள்ளாது விடுமுறை நாளின் விசேஷச் சாப்பாடு பற்றி விவரிக்க முடியாதுதான். இது அதி விசேஷமான பன்றி. வாயில் ஆப்பிள் பழம் திணிக்கப்பட வேண்டிய அவசியம் இதற்கு இல்லை. எங்கள் வீட்டு விருந்தில் மூன்று ரகமான பன்றி இறைச்சிகள் உண்டு. ஒன்று, நாட்டுப் பன்றியின் உறுதியான தொடை, கடல் நீர் மாதிரி உப்புக் கரிப்பது. அழுத்தமான செந்நிறந்தோடு, கடினமும் மென்மையும் கலந்து திகழும். தேவதூதன் காபிரியேல் குழல் ஊதக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய நாள் முதல், இதுவும் புகை வீட்டில் தொங்கிக் கிடந்திருக்கும். இதுதான் காலை உணவுக்கு, தானிய நொய்யோடு சேர்த்துப் பொரிக்கப்பட்டு சூடாகவும், உப்புச் ஒஹியோடும் கிடைக்கும். பிறகு, தானியம் கலந்த பன்றிக்கறி லேசாகக் கருநிறம் பெற்றது. இதில் லவங்கம் அதிகம் சேர்க்கப்படும். கடைசியாக, இளம் சிவப்பு நிறம் பெற்ற ரகம், இது கடின மானது அல்ல. இதன் துண்டுகள் விளிம்பில் மேல்நோக்கிச் சுருண்டும், மூலைகள் சிதைந்தும், மென்மையான வெண்சதைச் கீற்றுகள் பெற்றும் விளங்கும்.

இவற்றின் வாசனையும் இதர பதார்த்தங்களின் தோடு கூடிக் கலக்கும். சமையல்காரி கலீளுவின் காட்டு வான்கோழிகள் மெதுவாக வெந்து கெ