பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


விளம்பரப்படுத்தப்பட்டது! கெயிலிக் மொழி அபிவிருத்தி சங்கம், பெண்களின் தேசிய சங்கம், ஐரிஷ் தொண்டர்படை, ஐரிஷ் வாலிபச் சாரணர்படை முதலிய யாவும் சட்டவிரோதமான சபைகள் என்று விளம்பரப்படுத்தப்பட்டன. சுருக்கமாய்ச் சொன்னால் ஐரிஷ் தலைவர் ஆர்தர்கிரிபித் கூறியது போல் ஐரிஷ் ஜனசமுகம் முழுமையும் சட்டவிரோதமான கூட்டம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது!

மேற்சொல்லப்பட்டதில் இருந்து பிரிட்டிஷ் சர்க்கார் அயர்லாந்தில் சகல கொடுமைகளையும் செய்து தீர்த்துவிட்டதாக எண்ணிவிடவேண்டாம். மேலும் பல கொடுமைகளை அவர்கள் செய்யாமல் பாக்கி வைத்திருந்தனர். பின்னால் படிப்படியாக அவர்கள் எதற்கும்.துணிந்து முன்வந்து விட்டார்கள்.

1929ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரீன் மலோனுடைய வீட்டிலிருக்கும் பொழுதெ முதலாவது ஊரடங்குச்சட்டம் அமுலுக்கு வந்தது. அவ்வருடம் பிப்ரவரி மாதம் ஒருநாள் நள்ளிரவில் ஒரு போலிஸ்காரன் ஐரிஷ் தொண்டர்களை எதிர்த்ததால் கிராட்டன் தெருவில் சுட்டுக்கொல்லப்படட்டான். உடனே பிரிட்டிஷார், பட்டாளத்தைத்தவிர வேறெந்த மக்களும் இரவு 12 மணிக்கும் காலை 5 மணிக்குமிடையில் வீட்டை விட்டு வெளியேறக் கூடாதென்று உத்தரவிட்டார்கள். சில மாதங்களில் அந்த உத்தரவு தென் அயர்லாந்திலுள்ள பல கிராமங்களிலும் நகரங்களிலும் அமுலுக்கு வந்துவிட்டது. அத்துடன் அது நாளுக்கு நாள்மிகக் கடுமையாகவும் செய்யப்பட்டது. லிமெரிக்கில் இரவு 7 மணிக்கு மேல் யாரும் வெளியேறக்கூடாது என்று உத்தரவுவிடப்பட்டது. கார்க் நகரில் கொஞ்சகாலத்திற்கு மாலை 4மணிக்கு மேல் உத்தரவு அமுலில் இருந்து, தெருக்களில் யார் சென்ற போதிலும் அதிகாரிகள் அவர்களைச் சட்டுத்தள்ளி வந்ததார்கள். இவ்வாறு 1920 - 21ல் நூற்றாண்டுக்கணக்கான ஆடவரும், பெண்டிரும் குழந்தைகளும் நடுத்தெருக்களில் படுகொலை செய்யப்பட்டனர். பட்டாளத்தார் செய்த அக்கிரமங்களை யாரும் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. ஏனெனில் கொலைகள் நடக்கும் பொழுது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.

1920 - ஆம் வருஷம் வசந்தகாலத்தில் தான்பிரீனுக்கு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்தது. எப்பொழுதும் சாரல் துளிகள் விழுந்து குளிர்ச்சியாயுள்ள தாரா மலைப்பிரதேசத்தில் அவன் சில நாள் தங்க நேர்ந்தது. மிக நெருக்கமான டப்ளின் நகரத்தின் கிராட்டன் தெருவில் வசித்ததற்கும் மலையடிவாரத்தில் வசித்ததற்கும் மிகுந்த வேற்றுமை இருந்தது. தாரா மலையிலுள்ள பசுந்தோட்டத்தில்தான் பழைய ஐரிஷ் அரசர்கள் வசந்தகாலத்தில் தங்குவது வழக்கம். தான்பிரீன் அங்கு சென்ற முதல்நாளே குன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் ஒரு மணி நேரம் நின்று சுற்றிலுமிருந்த இயற்கையின் வனப்பைக் கண்ணாரப் பருகிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் பழைய ஐரிஷ் வீரர்களைப் பற்றியும் சுதந்தி

102