பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டுத்துச் சென்றதன் மூலம் தத்தம் பங்களிப்புகளை நல்கியுள்ளனர். 1916-48 காலப் பகுதியில் சிறப்புப் பெற்ற தலைவர்கள்.ஆர்தர் கிரிபித், மைக்கேல் கொலின்ஸ், டி வலெரா. இவர்களுக்கு இணையாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு போராளி தான்பிரீன். வீரம் செறிந்த அவனது போராட்டம், இந்நூலில் இடம் பெறுகிறது.

'பாம்பின் கால் பாம்ப்றியும்' என்ற முதுமொழிக்கிணங்க, தான்பிரீனின் போராட்ட உணர்வினை எமது போராளிகள் மத்தியிலும் தொற்றவைக்கும் நோக்கில் தான்பிரீன் பற்றிய நூலை எங்கிருந்தோ முத்துக் குளித்து கண்டெடுத்தவர், தமிழீழப் போராளிகளின் தளபதிகளில் ஒருவர். அதனை மக்களிடையே பரப்பும் நோக்கில் நூலாக்கம் செய்யவென, பிரதி எடுத்து வைத்திருந்தார் மற்றுமொரு தமிழிழப் போராளி. ஆனால் துரதிஷ்ட வசமாக, அவர்கள் எண்ணம் நிறைவேறுமுன்பாகவே, வீரமரணமடைந்துவிட்டனர்; அந்த இருவர் வாழ்க்கையும் கூட இன்று வரலாறுகிவிட்டது. எனினும், அவர்களின் அந்த உணர்வு பல்லாயிரம் போராளிகளை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவ்விருவரதும் உடனடி நோக்கமான நூல் வெளியீடு இன்று கைகூடுகிறது. இதுபோலவே அவர்களதும், அவர்களை ஒத்த பலரதும், பரந்துபட்ட மக்களதும் இலக்கான விடுதலையை அடைந்தே தீருவோம் என்பது திண்ணம்.

பிரதியெடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதியே எமக்குக் கிடைத்த நிலையில் அதன் ஆசிரியர் பற்றி அதிற் குறிக்கப்படாமையால் நூலாசிரியர் பெயர் தெரியாதிருந்தது. எனினும் நூலில் இடம்பெற்ற 'ஒரு வார்த்தை', முன்னுரை ஆகியவற்றின் ஊடாக, 1932 - 34 காலப் பகுதியில் நூலாசிரியர் திருச்சிச் சிறையில் அரசியல் கைதியாக இருந்த காலத்தில் எழுதியுள்ளார் என்பது புலனாகிளது. மேலும், முன்னுரையிலிருந்து, நூலாசிரியர், தான்பிரீன் நூலைத் தவிரவும் மைக்கேல் காலின்ஸ் பற்றியும், டொரென்ஸ் மாக்ஸ்வினியின் சுதந்திரத் தத்துவங்கள் பற்றியும் எழுதியிருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் தேடிப்பார்க்கையில் மைக்கேல் காலின்ஸ் கிடைத்தது. அதனைப் படித்துப் பார்த்ததில் அந்நூலில் உள்ள குறிப்புகளினூடாகவும், தான்பிரீன் பற்றிய நூலையும், மைக்கேல் காலின்ஸ் நூலை எழுதிய திரு. ப. ராமஸ்வாமி என்பவரே எழுதினார் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.

மேலும், இந்நூல் பிரசுரமான ஆண்டு எதுவென்பது தெரியாவிடினும், 1947 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்த மேற்படி மைக்கேல் காலின்ஸ் என்ற நூலில், சுதந்திரவீரன் தான்பிரீன் என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்திருந்தற்கான ஓர் அடிக்குறிப்புக் காணப்படுவதால் 1947ஆம் ஆண்டுக்கு முன்பே இந்நூல் வெளிவந்திருந்தது என்பது தெளிவு. நூலின் தலைப்பையும் பொருத்தம் கருதி நாம் மாற்றியுள்ளோம்.

9