பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


கள் லிஞ்சையும் அவருடைய தொண்டர்களையும் திடீரென்று எதிர்த்துப் போராடித் தப்பிவிட வேண்டுமென்றே இரகசியாகப் பேசிக் கொண்டனர். சில நிமிஷங்களுக்குள் அவர்கள் பேசியபடியே தொண்ர்கள் மீது பாய்ந்தனர். இரு கட்சியாருக்கும் போராட்டம் முற்றியது. கர்னல் டான் போர்டுக்குக் காயம் பட்டது. தொண்டர்களே வெற்றி பெற்றனர். அதன் மேல் லிஞ்ச் காயமடைந்த கனையும், டிரெல்லையும் கொளரவமாக விடுதலை செய்து, பெர்மாயிலிருந்த பட்டாளப்படை வீடுகளுக்குப் போகும்படி அவர்களை ஒரு காரில் அனுப்பி வைத்தார். லூகாஸை மட்டும் கைதியாக வைத்துக் கொண்டு பந்தோபஸ்தான ஓரிடத்தில் அவரையடைத்து வைக்கும்படி அனுப்பினார். இரு தளகர்த்தாக்களை விடுதலை செய்ததிலிருந்து லிஞ்சின் தாராள சிந்தையும் தொண்டர்களுடைய கண்ணியமும் விளங்குகின்றன. ஆனால் இந்த உதவிக்குப் பட்டாளத்தார் என்ன கைம்மாறு செய்தனர்? மறுநாள் இரவில் பெர்மாய் நகரையே தீவைத்து எரித்தனர் ஸியாம் வெற்றியடைந்து விட்டார் என்ற கோபமே இதற்கெல்லாம் காரணம்.

ஜெனரல் லூகாஸ் கண்ணியமான போர் வீரர். அவர் தொண்டர்களிடம் ஐந்து வாரம் கைதியாயிருந்தார். தொண்டர்கள் அவரை மிக்க மரியாதையாக நடத்திவந்து வேண்டிய உணவு, உடை முதலிய சௌகரியங்களும் செய்து கொடுத்தனர். அருவடைய பந்துக்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதற்கு வசதிகள் அளித்தனர். லூகாஸ் பின்னால் தப்பியோடிய காலத்திலும் தொண்டர்களுடைய உதவிகளை நன்றியறிதலுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கடைசியாக அவர் சிறை வைக்கப்பட்டிருந்த இடம் கீழ் லிமெரிக்கிலிருந்த ஒரு வீடு. ஜூலை மாதம் முதல் இரவு அவர் மிகவும் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விஷயம் முக்கியமான தொண்டர்களுக்கெல்லாம் பத்திரிகையைப் பார்த்த பின்பே தெரிய வந்தது.

ஜூலை மாதம் 30ஆம் தேதி லின்டிரீஸி, தான்பிரீன் முதலானவர்கள் லிமெரிக் நகருக்கும் திப்பெரரிக்கும் மத்தியிலுள்ள ரஸ்தாவில் ஆயுதபாணிகளாகக் காத்துக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தொண்டர்கள் சர்க்காருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தனர். ரயில்களையும் தபால்களைக் கொண்டு செல்லும் கார்களையும் மறித்து நிறுத்தினார்கள். அவற்றிலிருந்த கடிதங்களையும், பட்டாளத்தாரின் இரகசிய தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றிவந்தனர். இதனால் அவர்களுக்கு எதிரிகளுடைய உடவடிக்கைகளை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆங்காங்கேயிருந்த ஒற்றர்களில் எவர்கள் மிகவும் அயோக்கியர்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களைத் தண்டிப்பதற்கும் அரசாங்க கடிதங்கள் உபயோகமாயிருந்தன. சர்க்கார், தொண்டர்களுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் தபாலைக் கொண்டு செல்லும் கார்களுடன் பட்டாளங்களையும் பாதுகாப்புக்காக அனுப்பிவர ஆரம்பித்தது.

112