பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


கொழுத்திவிட்டனர்! பிரிட்டிஷாருடைய குண்டுகளுக்கெல்லாம் லேஸி தப்பிவிட்டான்! (ஆனால் பின்னால் நடந்த உள்நாட்டுக் கலகக்கில் 1923ஆம் ஆண்டு அவன் பிரீஸ்டேட் படைகளுடன் செய்த போராட்டத்தில் தன்நாட்டவர்களாலேயே உயிர் பறிக்கப்பட்டு மாண்டான்.)

டப்ளின் நடமாடுவது மிகவும் அபாயகரமானதாயிருந்தது எங்குபார்தாலும் இரகசிய பொலிஸாரும் அவர்களிடம் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களும், உளவாளிகளும் நிறைந்திருந்தனர். தொண்டர்களைப்பற்றி யார் என்ன தகவல் கொடுத்தாலும் ஏராளமான வெகுமதிகள் கொடுக்கபடும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இரகசிய போலிஸ்படை சீர்குலைந்திருந்தால், அதைப் புனருத்தாரணம் செய்வதற்கு அதிகாரிகள் ஓவ்வின்றி முயற்சித்து வந்தர்கள். பார்க்கும் இடமெல்லாம் காக்கி உடையணிந்ததுருப்புகளும், துப்பாக்கிகளும், ராணுவ லாரிகளுமாகவே கூட்டங்கூட்டமாகக் காணப்பட்டன. தெருக்களில் நடமாடுகிறவர்களையெல்லாம் ஒரே நாளில் ஏழெட்டு முறை சோதனை போட்டார்கள் டிராம் வண்டிகளிலும் பஸ் வண்டிகளிலும் படைவீரர் திடீர்திடீர்ரென்று புகுந்து பிராயினிகளை தடைபடுத்தி சோதனையிட்டனர். பட்டாளத்தார் பற்பல வீடுகளைச் சுற்றி பலநாள் சூழ்ந்து நின்று, உள்ளேயிருந்துயாரும் வெளியேறாமலும் வெளியிலிருந்து யாரும் உட்செல்லாமலும் தடுத்து வந்தார்கள். இவையெல்லாம் அத்ததலை நகரிலே தினசரி நிகழ்ச்சிகளாகப் போய்விட்டன.

பொது மக்களுடைய கடிதங்கள் தபாற் காரியாலங்களிலே உடைத்துப் பார்க்கப்பட்டன. நிரபராதிகளான மக்கள் டப்ளின் மாளிகைக்கு கொண்டுபோகபட்டு, தொண்டர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லும்படி சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு இரகசியமாய் நடத்தபட்ட கொடுமைகளுக்கு அளவேயில்லை. சாப்பாட்டு விடுதிகளிலுள்ள வேலைக்காரர்களுக்கெல்லாம் சர்க்கார் லஞ்சம் கொடுத்துத் தொண்டர்கள் வந்தால் தகவல் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தனர். பட்டாளத்தாரும் அதிகாரிகளும் டெலிபோன்மூலம் பேசிக் கொள்வதைப் பிறர் அறியாமலிருப்பதற்கு ஓர் இரகசிய பரிபாஷையை அமைத்துக் கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடியின் மத்தியிலே தான்பிரீனும் இடைவிடாது ஒற்றால் பின்பற்றபட்டான். அவன் தனது துப்பாக்கியையும் வீரத்தையுமே துணையாகக் கொண்டு சுற்றி வந்தான். ஆபத்து வேளைகளில் அவனுடைய வலது கைதுப்பாக்கியைப் பற்றிய வண்ணமாகவேயிருந்தான்.

கடைசியாக ஒருநாள் அவன் பகைவர்களின் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ள நேர்ந்தது. ஒரு வெள்ளிக்கிழமை இரவில் அவன் ஹென்றி திருமுனையிலுள்ள நெல்ஸன் தூண் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் அவன் அன்றிரவு கரோலன் என்பவருடைய வீட்டுக்குச் செல்வதற்காக டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வீடு டிரம்கொண்டராவுக்கும் வயிட்

118