பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லாந்து பிரிட்டனுடன் ஐக்கியமாக இருக்கவேண்டுமென்ற ஐக்கியவாதிகள் (Unionists); சுயாட்சி கோரிக்கை அணியினர் (Home Rule Party); அடுத்து குடியரசுவாதிகள் (Republicans) என்பனவாகும். போராட்டம் அதிகாரித்துவரும் வேளையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்கலாமென லிபரல் அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் 1880களின் நடுப்பகுதிகளில் குறிப்பிட்டனர். இதற்காக 1886 ஆம் ஆண்டு சுயாட்சி மசோதா (Home Rule Bill) பொதுமக்கள் சபையில் (House of commons) கொண்டுவரப்பட்டது. இம்மசோதா பொதுமக்கள் சபையிலே தோற்கடிக்கப்பட்டது. ஆயினும் இதனை நிறைவேற்றத்தான் முயலப் போவதாக லிபரல் அரசாங்கப் பிரதமர் குறிப்பிட்டார். பின்னர் 1893ஆம் ஆண்டு பொதுமக்கள் சபையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட போதிலும் பிரபுக்கள் சபையில் இது நிராகரிக்கப்பட்டது. பரிவுகாட்டும் முறையால் சுயாட்சிக் கொள்கையை அழித்துவிடு' (Kill Home Rule by Kindness) என்ற கருத்தினை முன்வைத்து கன்சர்வேட்டிவ் கட்சியினர் செயற்பட்டனர்.

இதன் மத்தியில் பேச்சு வார்த்தையாற் பயனில்லையென்றும் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அயர்லாந்தை விடுவிக்க முடியுமென்ற கொள்கை உறுதிபெறுகின்றது. இளைஞர் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். ஐரிஷ் மக்களின் உரிமைகளை முற்றாக மறுப்பதன் மூலம்போராட்டம் உக்கிரடைந்து இறுதியில் அயர்லாந்து விடுதலை அடைந்து விடுமென்பதையும் உணர்ந்த ஆங்கில ஆட்சியாளர் போராட்டத்தை தணிப்பதற்காகச் சில உரிமைகளைக் கொடுக்கும் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வந்தனர்.

பெரும் வரையறைகளுடன் 1914ஆம் ஆண்டு சுயாட்சி மசோதா (Home Rule Act) சட்டமாக்கப்பட்டது. இச்சுயாட்சிச்சட்டம் குடியரசுவாதிகளைத் திருப்திப்படுத்தவில்லை. அவர்கள் பூரண குடியரசுக் கொள்கையையே முன்வைத்தனர். இச்சட்டம் அயர்லாந்துக்குள் பிரச்சினையைத் தோற்றுவித்து விட்டது. சுயாட்சிவாதிகளுக்கும், குடியரசுவாதிகளுக்கும் இடையே முரண்பாடுகள் பெரிதும் ஏற்பட்டன. சமரசத் தலைமை மக்களைப் பெரிதும் ஏமாற்ற முனைந்தது. குடியரசுக் கொள்கையை முன்னணிக்குள் கொண்டுவரக் குடியரசுவாதிகள் பெரிதும் முயன்றனர். இந்நிலையில் 1916ஆம் ஆண்டு குடியரசைவிரும்பும் தீவிர இயக்கங்கள் சில ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்டன. இவ்வாயுதம் தாங்கிய எழுச்சி அடக்கப்பட்டது. இக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட முக்கிய முன்னணிப் பேராளிகள் 15 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுக் கொள்கை பெரிதும் செல்வாக்குப் பெற்றது. இதன் பின்பு 1918ஆம் ஆண்டு

18