பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


யர் அயர்லாந்து ஜனங்களைக் கட்டாயப்படுத்தி யுத்தத்திற்கு இழுத்துக் கொண்டு வர வேண்டும் என்று கூவினர். மன்னர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது? ஆங்கிலேயர் அனைவரும் அயர்லாந்தின் மன்னரன்றோ சில வாரங்களில் தேவையான சட்டம் பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டது. ஐரிஷ் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும் அவர்களைப் போர்க்களத்திலே பலிக்குக் கொண்டு நிறுத்தும் அதிகாரத்தை அச்சட்டம் ஆங்கிலேயருக்கு கொடுத்தது. அப்பொழுது முன் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட லார்ட் பிரெஞ்ச் டப்ளின் நகரில் வைசிராயாக இருந்தார்.

பிளவுபட்டு அயர்ந்து கிடக்கும் ஒரு தேசத்தை ஐக்கியப்படுத்தி எழுப்பிவிட வேண்டுமானால் அதற்கு சிறந்த உதவி அடக்கு முறையைப் போல் வேறில்லை. கட்டாய ராணுவச்சட்டம், அயர்லாந்தின் கண்ணைத் திறந்துவிட்டது. அதுவரை ஐரிஷ் ஜனங்கள் பிரிட்டிஷாரை அவ்வளவு கடுமையாய் எதிர்த் தில்லை. ஆண், பெண், குஞ்சுகள் யாவரும் அச்சட்டத்தை எதிர்த்தனர். பாமரர் முதல் பாதிரியார் வரை அனைவரும் அதைக் கண்டித்தனர். அதுவரை பிளவுபட்டிருந்த கட்சிகளெல்லாம் மந்திரத்தில் கட்டுண்டதுபோல் ஒன்று சேர்ந்து உழைத்தனர். தாங்கவொண்ணாத துன்பம் தலைமேல் விழப்போவதை அறிந்த ஜனங்கள் தொண்டர் படையினர் என்ன செய்கின்றனர்? அவர்கள் துப்பாக்கியும் ரிவால்வரும் கொண்டு பயிற்சி செய்தது வெறும் பாவனைக்காகவோ? என்று கூவினர். இங்கிலாந்தை எதிர்க்கக்கூடியவர்கள். அவர்களே என்று யாவரும் உணர்ந்தனர். ஒரு தொண்டன் உயிரோடிருக்கும் வரை கட்டாய ராணுவச் சட்டம் அமுலுக்கு வர முடியாது என்பதை அயர்லாந்தும் அதை ஆண்டு அடக்கிய இங்கிலாந்தும் நன்கு அறியும்.

தொண்டர் படையில் ஆட்களுக்குக் குறைவில்லை; ஆயுதத்திற்கே முடை! பல்லாயிரம் வாலிபர்கள் அப்படையில் சேர்ந்து கொண்டனர். ஆனால் காற்றுக்கூடப் புகமுடியாதபடி பாதுகாக்கும் ஆங்கிலேயர் கண்முன்பு அத்தனை பேருக்கும் ஆயுதங்களைச் சேர்ப்பது எங்ஙனம்? தொண்டர்கள் திகைத்துத் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கைகள் ஆயுதந்தாங்கத் துடித்துக் கொண்டிருந்தன. கால்கள் போர்க்களத்திற்கு செல்ல முனைந்து நின்றன. அந்நிலையில் அவர்கட்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அயர்லாந்தில் அரசாங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சில பணக்காரர்களும் ராஜவிசுவாசிகளும் துப்பாக்கிகளையும், ரிவால்வர்களையும், பட்டாக்கத்திகளையும், ஈட்டிகளையும் தங்கள் மாளிகைகளிலே சும்மா வைத்துக் கொண்டிருந்தனர். ராஜவிசுவாசிகளுக்கு இத்தனை ஆயுதங்களும் எதற்கு? புரட்சிக்காரருக்கே அவை தேவை! தொண்டர்கள் இதை அறிந்து கொண்டு, ஊரூராய்ப் பிரிந்து சென்று ஆயுதம் சேகரிக்க ஏற்பாடு செய்தார்கள். முதலாவது எந்த ஊரில், யாரிடம், எத்தனை

43