பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9
போலிஸாரிடம் பிடிபட்ட தொண்டன்


தான்பிரீன் அன்னையிடம் அரிதில் விடைபெற்றுக் கொண்டு நண்பர்களுடன் கிளான்மெல் நகருக்குச் சென்றான். அதுதான் ஐரிஷ் போலிஸாரின் தலைமை இடம். அங்கிருந்த்தொண்டர்படைத் தலைவர்களைக் கண்டு பேசி, விரைவாகக் காரியங்களை ஆரம்பிக்கவேண்டும் என்று தான்பிரீன் வர்புறுத்தினான். நகரத் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினான் பிறகு அங்கிருந்து அவனும் நண்பர்களும் ரோஸ்மூரை அடைந்தனர்.

ரோஸ்மூரில் ஒரு நண்பர் பக்கத்து ஊரான பல்லாக் என்னும் இடத்தில் ஈமன் ஒப்ரியேனுடைய வீட்டில் ஒரு நடனக் கச்சேரி நடக்கப் போவதாக தெரிவித்தார். தான்பிரீனும் அவன் தோழர்களும் களைப்பை மறந்தனர். அங்கு போவதில் ஏற்படக்கூடிய ஆபாயத்தையும் கருதவில்லை.பல வருஷங்களாக அம்மாதிரியான கச்சேரிகளில் அவர்கள் கலந்து கொண்டதில்லை. ஆதலால் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று தீர்மானித்தனர். அதன்படி கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றனர். போனவுடன் விருந்துண்ணும் கூட்டத்தோடு கலந்து கொண்டனர்.

அங்கு பாடப்பட்ட கீதமும், அளிக்கப்பட்ட உணவுகளும் மிகவும் இனிமையாக இருந்தன. தொண்டர்கள் தாங்கள் 'சட்ட விரோதமான நபர்கள் என்பதை அடியோடு மறந்து உண்பதிலும், ஆடுவதிலும் ஆனந்தமாய்ப் பொழுது போக்கிவந்தனர். பீலர்களும், ராணுவத்தாரும் வெளியே பல இடங்களில் அவர்

74