பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


மூன்று பேர் செய்யக்கூடிய காரியமில்லை. ஆதலால், தான்பிரீன் உதவியாட்கள் வேண்டுமென்று திப்பெரரி நகரலிருந்து தனது படைக்குத் தகவல் சொல்லிவிட்டான். திப்பெரரியில் இருந்து எமிலி ஏழாவது மைலில் இருந்தது.

முன்னேற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு முடிந்தன. 1919 மே மாதம் 12ஆம் தேதி தான்பிரீனும் நண்பர்களும் தங்களுடைய சைக்கிள்களை எடுத்துக் கொண்டு எமிலியை நோக்கிப் புறப்பட்டனர். கோபத்தினாலும், ஆத்திரத்தாலும், கவலையாலும் அவர்களுடைய உதிரம் கொதித்துக் கொண்டிருந்தது.

நேர் பாதையிலே சென்றால், எமிலி முப்பது மைல் தூரத்தில்தான் இருந்தது. ஆனால் நேர் பாதையிலே போலிஸ் தோழர்கள் அடிக்கடி நடமாடிக்கொண்டிருப்பார்கள் அல்லவா? காட்டுப்பாதையில் ஐம்பது மைல் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. பாதையோ சீர்கெட்டது. எங்கு பார்த்தாலும் மேடும், பள்ளமும் குழியும், கல்லுமாயிருந்தது. சைக்கிள்களில் அவர்களுடைய உடல் இருந்தனவேயன்றி, உறக்க மயக்கத்தால் மூவருடைய தலைகளும் நாலு பக்கத்திலும் ஆடிக்கொண்டேயிருந்தன. நண்பனை மீட்க வேண்டும் என்ற ஆத்திரம் மட்டுமே அவர்களையும் சைக்கிள்களையும் தள்ளிக்கொண்டு சென்றது.

இடையிலே ஸீன்டிரீஸி வழக்கம் போல் கதைகள் சொல்ல ஆரம்பித்தான். வழியிலிருந்து ஊர்களின் சரித்திரங்களையும் அவற்றில் வசித்த வீரர்களைப் பற்றியும் அவன் விரிவாக எடுத்துச் சொன்னான். திடீரென்று ஏதோ வீழ்வதாக. சத்கங் கேட்டது. டிரீஸியும், தான்பிரீனும் பின்னால் திரும்பிப் பார்த்தனர். ராபின்ஸன் சைக்கிளிலிருந்து தூங்கிக் கீழே விழந்து விட்டான் விழுந்தவன் பங்குவதைக் கண்டனர். அவன் உடலில் அவ்வளவு களைப்பு இருந்தது. அவர்கள் அவனைத் தட்டி எழுப்பபி அழைத்துக் கொண்டு சென்று மே மாதம் 13ஆம் தேதி காலை எமிலியை அடைந்தனர்.