பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

ஆதன் அவினி என்ற சேர அரசன் பெயர் இரண்டாவது பாட்டிலே வருகிறது.

அரசர்கள் பகை தணிந்து வாழவேண்டுமென்றும் அவர் களுடைய வாழ்நாள் பெருகவேண்டுமென்றும் வாழ்த்துவது மரபு. உலகங்களே மேல் கீழ் நடு என்று வகைப்படுத்தி மூவகை உலகம் என்பார்கள். பழங்காலத்தில் மகளிர் தழையு டையைக்கட்டுவது உண்டு. அணிகளே அணிதலும், கற்புக்கு அடையாளமாக முல்லைப் பூவை அணிதலும்மகளிருக்கு வழக் கம். பாணர் இடத்துக்கு ஏற்ற பண்களேப்பாடுவார்கள். அவர் கள் பாடும் பாட்டை ஆடவர் மகளிர் குழந்தைகள் யாவரும் சேர்ந்து கேட்பார்கள். -

இந்தப் புத்தகத்தில் உள்ளபதினுெருபாடல்களைக் கொண்டு இவற்றை உணரலாம். இன்னும் புலவர்கள் ஒரு செய்தி யைச் சொல்லும் முறையும் இயற்கையைவருணிக்கும் திறமும் உள்ளுறையுவமத்தால் குறிப்பாகச் செய்திகளைப் புலப்படுத்தும் வகையும் உள்ளே உள்ள விளக்கங்களிலிருந்து தெளிவாகும். சுருங்கிய உருவத்தில் பாடல் அமைந்திருந்தாலும், அப்பாட லாகிய கூற்றுக்குரிய நிலைக்களமும் பாட்டினுள்டே பல பல கருத் துக்களும் குறிப்புகளும் பாட்டின் பயணுகிய செய்தியும் விரித்து உணரும்படி அமைந்திருக்கின்றன. சங்கப் புலவர்களின் வாக் கில் எல்லாம் இந்தச் சொற்சுருக்கத்தைக் கண்டு மகிழலாம்.

3

பழங்காலத்தில் எட்டுத்தொகைநூல்களேத் தனித்தனியே தொகுக்கும்போது ஒவ்வொன்றையும் யாரேனும் ஒரு செல் வ. தொகுக்கச் செய்தார். ஒரு புலவர் அதைத் தொகுத்தார், ஐங்குறு நூற்றைத் தொகுக்கும்படி செய்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேர அரசர். அவர் வேண்டுகோளின்படி இதைத் தொகுத்தவர் புலத்துறை முற் நிய கூடலூர் கிழார் என்னும் புலவர் பெருமான்.

இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது சில குறிப்புகளை மாத்திரம் தருகிறதேயன்றிப் பொழிப்புரை யாகவோ விரிவுரையாகவோ அமையவில்லை. இந்தப் புத்தகத்தில் வரும் பாடல்களுக்கு அவ்வுரையாசிரியர்