பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமாபாகன் - - - - - ... 3

கின்றன. உலகங்களுக்குத் தோற்றமும் ஒடுக்கமும் உண்டு. தோன்றிய உலகத்தை அவ்வாறு தோன்றும் படி செய்யும் ஒரு பொருள் என்றும் அழியாமல் இருக் கின்றது. தோற்றமும் ஒடுக்கமும் உடைய உலகங் களேப் படைப்பவன் அவற்றின் தோற்றத்துக்கு முன்பும், ஒடுக்கத்திற்குப் பின்பும் இருப்பவனக இருக் தால்தான் அவற்றைப் படைக்க இயலும். ஆகவே உலகங்களே உண்டாக்கிய இறைவனுக்குத் தோற்ற மும் ஒடுக்கமும் இல்லை என்று நூல்கள் சொல் கின்றன. -

- அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி

பகவன் முதற்றே உலகு,

திருக்குறளின் முதற்பாட்டு உலகத்தைக் காட்டி

அதை உண்டாக்கிய முதற்கடவுளேயும் காட்டுகிறது.

மூவகை உலகமும் இறைவனிடத்திலிருந்து தோன்றின என்று நம் நூல்கள் கூறுகின்றன. பழங் தமிழ் நூல்களில் பல இடங்களில் இந்தக் கருத்தைக் காணலாம்.

'இறைவன் உலகத்தைத் தோற்றுவித்தான் என்பதையே பல விதமாகப் புலவர்கள் சொல்வார்கள். பாரதம் பாடிய பெருந்தேவனர் என்ற புலவர் ஐங்குறு நூறு என்ற தொகை நூலில் கடவுள் வாழ்த்தாக உள்ள செய்யுளைப் பாடியிருக்கிருர். உலகம் யாவும் இறைவனிடமிருந்து தோன்றின என்று அவர் கூறுகி ருள். உலகம் தோன்றின என்று சொன்னலும் இறைவ. னிடமிருந்து தோன்றின என்று செர்ன்னமையால் உலகங்கள் தாமே தோன்றுவன அல்ல, ஒருவன்

தாமரை-2