பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை 15,

போது மாத்திரம் கற்புக்குத் தனிச்சிறப்பு வந்து விடுமா? -

தோழி: அப்படி இல்லை. இப்போது நீ உன் காதலரைச் சில காலமே சந்திக்க முடிகிறது; பல காலம் பிரிந்து வாழ வேண்டியிருக்கிறது. மணம் ஆகி விட்டால் எப்போதும் பிரிவின்றி வாழலாம்.

தலைவி: மணம் ஆகிய பின் மாத்திரம் பிரிவு இல்லையா? ஆடவர்கள் தம் தொழில்களில் ஈடுபட்டுப் பகல் நேரத்தைப் போக்குவார்கள். அப்போது மனைவிய ருடன் இருக்க முடியுமா? பொருள் தேட வெளியூ ருக்குப் போனல் சில காலம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருக்கவேண்டி கேர்கிறது. அப்போது அவர்களிடையே உள்ள காதலுக்கும் கற்புக்கும் ஏதேனும் இழுக்கு உண் டாகிறதா? இப்போது அவரைப் பிரிந்து வாழும் நேரத்தை அத்தகைய தென்றே நான் எண்ணி அமைதி பெறுகிறேன். கணவன் மனேவியராக வாழும் வாழ்க்கைக்கும் இந்த வாழ்க்கைக்கும் என் அளவில் வேறுபாடு ஒன்றும் இல்லை. அப்போது

உள்ள இன்பம் இப்போதும் கிடைக்கிறது.

தோழி, இன்பம் கிடைப்பது உண்மைதான். நீங்கள்

இருவரும் இல்லறம் புரிந்து வாழ வேண்டாமா?

தலைவி: நாங்கள் இருவரும் இல்லறம் புரிவதென்பது வார்த்தை அளவில்தான். உண்மையில் அவர்தாம் எதையும் செய்யும் தகுதியும் உரிமையும் உடைய வர். கான் கிழலைப்போல் அவருடன் நிற்பவள்