பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லுடைய செல்வன் 27

வளம் உண்டா? நல்ல பிரபுவா கல்வியறிவுள்ளவரா? என்ற கேள்விகளைக் கேட்டுத் தங்கள் ஐயங்களைப் போக்கிக் கொள்வது நாகரிகமாகத் தோன்றவில்லை.

ஆகவே, அவர்கள் இந்த மணத்திற்கு உடம்பட வில்லே. ஏதோ ஒரு விதமாகத் தங்கள் கருத்தைக் குறிப் பித்துவிட்டார்கள்.

அவர்களுக்கு,"அவன்தான் தலேவியின் அன்புக்குரிய வன், ஆருயிர்க் காதலன், வழிபடுதெய்வம் என்றசெய்தி தெரியாது. அது தெரிந்தால் மறுத்திருக்கமாட்டார்கள்.

தலைவன் தலைவியை வரையும் பொருட்டுப் பெரி யோர்களே அனுப்பியதையும், அவன் வரைவை ஏற்றுக் கொள்ளாமல் தங்தையும் பிறரும் மறுத்ததையும் தலைவி உணர்ந்தாள். இடி விழுந்த நாகம் போலாகிவிட்டாள். ஒரு மைந்தனிடம் காதல் பூண்டு அவனேயன்றி வேறு தெய்வத்தை அறியாத கற்புத் திறம் அவளிடம் இருக் தது. அந்தத் தலைவனுக்கு வாழ்க்கைப்படாவிட்டால் அவள் வாழ்வு என்னுவது? இனி வேறு ஒருவனே மணந்து வாழ்வது என்பதை அவள் மனம் கற்பனை செய்யவும் அஞ்சியது. இனி நமக்கு ஒரு முடிவுதான் உண்டு. கம் காதலரோடு வாழும் வாழ்க்கை நமக்கு இல்லை. இனி இந்த உடலில் உயிரைத் தாங்குவதாற் பயன் இல்லே என்று அவள் உறுதி பூண்டாள். . . -

அந்தக் கணத்திலிருந்தே அவள் உடம்பிலே பொலிவு குறையத் தொடங்கியது. முகம் மலர்ச்சி யின்றி வாடியது. கண் ஒளி இழந்தது. ,