பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தாமரைப் பொய்கை

தற்கு எல்லோரும் திட்டம் போட்டுக் கொண்டிருப்ப தாக எண்ணினர்கள் அவ்விருவரும். அதற்குக் கார ணம் என்ன? இனிமேல் ஒருவன் வந்து தனக்கு அவளே மணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லே. அந்த நிலையை அவள் கடந்துவிட்டாள். தனக்கு என்று ஒரு காதலனை அவள் தேடிக்கொண்டு விட்டாள். இல்லே, இல்லே; அவளுக் குரிய காதலன் அவளே யாரும் அறியாமல் கண்டு அவளைத் தன் காதலியாக ஏற்றுக்கொண்டு விட்டான். அப்படிச் சொல்வதுகூடப் பொருத்தம் அன்று. அவர் களுடைய நல்ல ஊழ்வினையானது அவர்கள் இருவரை யும் ஒன்றுபடுத்தி விட்டது. யாராலும் பிரிக்க வொண்ணுமல் இறுகி அமைந்த உறவு அது.

ஆகவே, அவள் இப்போது கன்னிஅல்ல; ஊராருக் குக் கன்னி போலத் தோன்றி ைலும் அவள் ஒரு காதல ஆணுக்கு உரியவளாகி, அருந்ததியும் கொழும் கற்புத் திறம் படைத்தவளாகி விட்டாள். இனி மற்றவர்கள் அவளை மணந்துகொள்ள கினப்பதும், அதற்குரிய முயற்சிகளைச் செய்வதும் பயனற்ற செயல்களே ஆகும். - -

இந்த உண்மை தலைவிக்குத் தெரியும் தோழிக்குத் தெரியும். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாதே! ஆகவே, அவர்கள் வருகிற நொதுமலருக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிருர்கள். இருக்கிற நிலையைப் பார்த்தால் அவர்களுக்கு அந்த ஆடவன் மனசு பிடித்தவனுகவே இருப்பானென்று தோன்றுகிறது. அவர்கள் அக்க ஆடவனே மருமக ளுக்கிக் கொள்ளவும் உடம்படலாம். .