பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலை குளிர்ந்தது 83.

போல் இருக்கிறதே! அசையும் விலங்கும் அசையா மரமும் வாடி வதங்கும் இந்த நிலத்தின் வெப்பம் எனக்கு இதுகாறும் தோன்றவில்லையே! எவ்வளவு இன்னல் தரும் வழி இது பொறியும் வரியும் உள்ள தடக்கை வேகும் என்று அஞ்சி நிலத்தைத் தொடாமல் செல்லுகின்றன, சிறு கண் யானைகள். சோலைகள் வெயிலால் உலர்ந்திருக்கின்றன. மூங்கில்கள் மாத்தி ரம் தனியே ஓங்கி கிற்கின்றன. இத்தகைய கொடுமை யான இடமாக இருந்தாலும் எனக்கு இதுகாறும் இந்த வெம்மை தெரியவில்லையே! தண்ணென்று இருந் ததே! இது என்ன ஆச்சரியம்! இத்தனைக்கும் கார ண்ம் என்ன? என் மனத்துக்குள்ளே கோயில் கொண் டிருக்கிருளே, என் காதலி, அவளுடைய கினேவுதான் அந்தத் தண்மையை உண்டாக்கியது. அவளுடைய இனிய குணங்களே நினைக்க, கினேக்க பாலை நிலததிலே போகிறேன் என்ற நினைவே இல்லாமற் போய்விட் டது. அற்புதமான எழிலும் அதிசயமான பண்பு களும் உடையவள் என் காதலி. இத்தகையோள் பண்பே இந்த அரிய வழியில் தண்மையைச் செய்தன: இதை எண்ண எண்ண அவனுக்கு வியப்பு மீதுர் கின்றது. உடனே, இத்தகையவளே விட்டுவர நேர்க் ததே! என்ற வருத்தமும் உண்டாகிறது.

பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச் சிறுகண் யானை நிலம்தொடல் செல்லா, வெயில்முளி சோலைய, வேய்உயர் சுரனே; அன்ன ஆரிடை யானும், தண்மை செய்த இத் தகையோள் பண்பே,