பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? 확~결> சொல்கிருன் பட்டத்து இளவரசன் எனது அருமைத் தோழர்களே! தோழியர்களே! வணக்கம். கல்லும் மண்ணும் கதை சொல்லத் தொடங்கிய காலந்தொட்டு, புகழ் மண்டிக்கிடக்கிறது நமது தாயகம் என்று அடிக்கடி நம் பள்ளியில் சொல்லிக் கொடுத்து வருகிருர்கள் அல்லவா? அத்தகைய சிறப்புப்பெற்ற நமது நாட்டிலே, மங்களபுரி, மங்களபுரி என்று ஒரு நாடு இருந்தது. மங்களபுரியின் சிறப்புக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானல், அந்நாட்டின் அவைப் புலவர் பாடிய பாடலொன்றின் கருத்தைச்சொன்னலே, போதும்! - மங்களம் ஆட்சி புரியும் நாடு அது’ என்று பாடியிருக்கிருர் அந்தப் புலவர் பிரான், இதி லிருந்தே அந்நாட்டின் பெருமை புரிகிறதல்லவா?. இப்படிப்பட்ட ஒரும் சிறப்பும் கொண்ட காட்டிலே விஜயசிம்மன் என்று ஒர் அரசன் ஆண்டு வந்தான். ஆட்சிக்குழு, அமைச்சரவை, அந்தரங்க ஆலோசனைச்