பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத்து இளவரசன் - | 3 தென்று மறுத்துவிட்டாளும் இதைக் கேட்ட வேந்த னுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. குடிமகன் செய்த குற்றத்துக்கும் மன்னன் தானே பொறுப்பு? ஆகவே, அவன் அருகிலிருந்த கல்தூணில் மடார் மடார்’ என்று முட்டி மோதிக்கொண்டானும். ரத்தம் பீறிட்டது. அப்பொழுது, மன்னனது முடி தெரிந்து விட்டதாம்! அப்புறம், பரதேசியின் பசி பறந்துவிடக் கேட்கவா வேண்டும்? இவ்விரு கதைகள் மட்டும் இப்போதைக்குப் போதும், விஜயசிம்மனது உயர்மனத்தை எடுத்துக் காட்ட ! கோனுயரக் குடி உயர்ந்து, அதன் மூலமாக மங்காத புகழ் பெற்று விளங்கிய மன்னன் விஜய சிம்மனுக்கு ஒரே ஒரு மைந்தன் இருந்தான். அவனே பட்டத்து இளவரசன். பெயர் : விஜயேந்திரன். அரசாட்சியின் ஒழுங்குக் கட்டுப்பாடுகளைப் பற்றி அவ்வப்போது அரசன் தன் மகனுக்குப் பாடமாகவும் செயல் மூலமும் கற்பித்து வந்தான். 'பகைவரால் கெடுக்கப்படாததாகவும், கெட்டுவிட்ட காலத்திலும் செழிப்பு குறையாததாகவும் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் சிறப்புடையதாகும், மகனே இது என் வாக்கன்று. தமிழ்மறையின் வேதவாக்காகும்......” என்று அறிவுரை வழங்கத் தவறமாட்டார். எதிரிகள் என்று அவருக்கு யாருமில்லை. ஆனால், அண்டை அயல் நாட்டினர் சிலர் அவரை எதிரி