பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாயின் மணிக்கொடி யாகவே கருதினர். இவர்களிலே ஒருவன் நிலவுத் தீவு மன்னன். அவன் வஞ்சமாக விஜயசிம்மன் பேரில் படையெடுத்தபோது, அவனது வஞ்சத்தை அம்பலப் படுத்தியதுடன், இனிமேல் மங்களபுரி எல்லையினை அவன் தாண்டக்கூடாது என்று ஒப்பந்தமும் வாங்கிக் கொண்டான். இம்முறைப்பட்ட அரசியல் ராஜதந் திரத்திலும் வல்லவகை விளங்கின விஜயசிம்மன், தன் புகழ் மங்காதிருக்கும்போதே, தன் அருமை மகன் இளவரசன் விஜயேந்திரனுக்கு மணம் செய்து பார்க்கப் பெரிதும் ஆசைப்பட்டான். ஒரு நாட்டின் அரசன் விரல் அசைத்தால் போதாதா? மங்களபுரியே மணக்கோலம் பூண்டாற்போன்று திகழ்ந்தது. - பட்டத்து இளவரசனின் கல்யாணம் என்ருல், சாமான்யமா? இளவரசன் விஜயேந்திரன் தனது முறைப் பெண்ணுன ராஜவல்லியையே இதயபூர்வமாக விரும்பினன். - - ராஜவல்லிதான் விஜயசிம்மனின் தமக்கை மகள். இருவரும் பிஞ்சுப் பருவம் முதல் ஒன்ருய்ப் பழகியவர்கள். . . . . . . . . - . விஜயேந்திரனுக்கும் ராஜவல்லிக்கும் கல்யாணம் நடைபெறுவதற்கான நாளும் கோளும் நிச்சயிக்கப் பட்டன.