பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 தாயின் மணிக்கொடி மணக்கோலம் பூண்டிருந்த மங்களபுரி அரண்மனை கண்மூடிக் கண் திறக்கும் போதிற்குள் போர்க்கோலம் பூண்டுவிட்டதை எண்ணுகையில், இது விதியின் செயல் என்றுதானே சொல்லத் தோன்றுகிறது ஆம், விதியின் வினைதான் இது. இல்லாவிட்டால், மங்களபுரி மன்னன் கேசக் கரம் நீட்டி, பழைய பகையையும் மறந்து பெருங் தன்மையுடன் நிலவுத் தீவு வேந்தனுக்கும் மன ஒலை அனுப்பியும், கஜேந்திரபாகு இவ்வாறு சூழ்ச்சி கொண்டு படையெடுத்திருப்பான? பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கிற பண்பும் சீலமும் உடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருக்கவல்லது? என்ற ஆன்ருேர் மொழியை மெய்ப்பிக்க வேண்டும் என்பதே என் கருத்தும் ஆசையும் ஆகும், விஜயேந்திரா என்று விவரித்தான் மன்னர் மன்னன், ஆல்ை, கடைசியில் நடந்ததென்ன, பார்த்தர் களா? நிலவுத் தீவு மன்னன் தான் உடன்படிக்கை செய்து கொடுத்தபடி நடக்காமல், எல்லைக்கோட்டைத் தாண்டி மங்களபுரி மீது படை எடுத்து விட்டான். அவனது போர்ப்படை வரிப்புலிக்கொடி ஏந்தி முற்றுகையிட வந்துவிட்டன.