பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டியது போர்முரசம் 19 " திருமண முகூர்த்த வேளையைக் கெடுக்க வேண்டும் என்ற துர் எண்ணத்துடனேதான் கஜேந் திரபாகு இப்படிப் படையெடுத்திருக்க வேண்டும். அவன் படை எடுத்ததைப்பற்றித் துளியும் கிலேசப் படவில்லை, தேவி ஆல்ை, நம் ஒரே மகன் திரு மணம் இவ்வாறு அபசகுனம் பிடித்தமாதிரி தடங்கல் பட்டு விடப்போகிறதே என்றுதான் அச்சமும் அல்ல லும் படுகிறேன்! ’ என்று வருந்தின்ை மன்னன். ராணி மங்களாம்பிகையும் மெய் வருந்தினுள்; கண்ணிர் சொரிந்தாள். உடனே அரசன் விஜயசிம்மன் தன் குலதெய்வ மான பவானித்தாயை நாடி ஒடி விழுந்தான். அவனது கோலத்தைக் கண்டு ஏவலாளர்களும் நடுங்கினர். தாயே! அந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி விடாதே தாயே! என் மகன் திருமணம் தடைப்பட்டு விடுமா?... ஐயையோ!' என்று உருகினன். வெளிப்புற மதிலின் ஒரத்தில் நின்றது சாரட்டு வண்டி அதில் காத்திருந்த ராணியின் பக்கமாக அமர்ந்தான் விஜயசிம்மன். சாரட்டு புறப்பட்டது, வழியில் இளவரசன் கையில் வாள் ஏந்தி வீறு கொண்டு கடந்து வந்துகொண்டிருந்தான். அருமைப் பிள்ளையின் போர்க்கோலம் கண்டு பெற்றேர்கள் துடி துடித்தனர். 'திருப்பூட்டக் கூட கினைப்பின்றி இப்படிப்