பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தாயின் மணிக்கொடி புறப்பட்டு விட்டாயே, மகனே? ' என்று புலம்பினுள் தாய். - - "முதலில் எனக்கு என் நாடும், என் நாட்டின் மானமும் தான் உயிர்; அதுதான் என் முதல் லட்சியம், தாயே! என் தாயின் மணிக்கொடி பட்டொளி விசிப் பறந்திடச்செய்து பார்ப்பதுவே இப்போதைக்கு என் கடமை, கவலையெல்லாம் ! எதிரியின் வஞ்சத்தை விழச்செய்து, அந்த எத்தன் கஜேந்திரபாகுவின் அடாத செயலுக்குப் பாடம் போதித்த பிறகுதான் என் திருமணம்! “ என்று வீரம் விளைந்த செருக்குடன் முழக்கமிட்டான் இளவரசன். அவன் பேசி முடிப்பதற்குள், வீராங்கனையாக வீரத்திலகம் திகழ ஓடிவந்தாள் ராஜவல்லி. ‘அத்தான்! கான் உங்களுடைய சொத்தாக என்ருே நிச்சயிக்கப் பட்டவளல்லவா? ஆகவே, உங்களது நாட்டுப்பற்றுக்கு வாழ்த்துக்கூறி அனுப்பவேண்டியது எனது கடமை யாகும். ஆனல் ஒரு நிபந்தன. உங்களுடன் போருக்கு நானும் வருகிறேன். இந்த ஒரு வரத்தை மாத்திரம் அருளுங்கள், அத்தான் 1’ என்று நீர்சோர வேண்டிக்கொண்டாள் அவள். விஜயேந்திரன் கம்பீரப் பார்வையைச் சுழற்றின்ை. சுழன்ற விழிகளுடன் நின்ற வடிவழகி ராஜவல்லியைப் பார்த்தான். 'அன்பே உன்னுடைய பதிபக்தியும் ராஜபக்தியும் போற்றப்பட வேண்டியவையே. ஆல்ை, நீ ஐதீகப்படி என் சொத்தாகவும் உரிமையாகவும்