பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னமும் ஆகவில்லையே! இக்கிலையிலே உன்னை என்னுடன் எங்ங்னம் நான் அழைத்துச்செல்ல முடியும்? போர்முடிந்து, வெற்றியுடன் வாகைசூடித் திரும்பி னதும், உன்னை என் இதய ராணியாக்கிக் கொள் கிறேன்!” என்று மறுமொழி உதிர்த்தான் இளவரசன். இதைக்கேட்ட சடுதியில் ராஜவல்லி தன் கைப் பிடிப்பிலிருந்த அந்தத் தாலியை எடுத்து விஜயேந்திர னிடம் நீட்டி, இந்தாருங்கள் அத்தான்!... உங்கள் கரங்களால் எனக்குத் தாலி கட்டுங்கள் முதலில் ' என்று மீண்டும் கெஞ்சினுள். அதேகணத்தில், போர்முரசம், அபாய அறிவிப்பின் உச்சக்கட்டத்தின் நிலையை அறிவிக்கும் வகையில் முழங்கிற்று.