பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தாயின் மணிக்கொடி தெற்குப் புறத்தே மங்களபுரி நாடு, வடக்கே பாலாறு. மிகுந்த நீர்ப்பரப்பு. அதையடுத்து இருந்தது நிலவுத்தீவு. அழகிய தீவு. மரக்கலமும் மோகினிப் பாலமும் அரசாங்க முத்திரையுடன் இயங்கின ! மங்களபுரிக்கும் நிலவுத் தீவுக்கும் இடையில் எல்லைக்கோடு ஒன்று இவ்விரு நாடுகளுக்கும் எல்லை சொல்லியது. ஆமாம்; நம் பாரதத்துக்கும் சீனுவுக்கும் எல்லை யாக மக்மகான் கோடு இருப்பதைப் போலத்தான்! ஒப்பந்த ஷரத்துக்களை மீறி நடப்பதென்ருல், எந்நாட்டவர்தான் சும்மா இருப்பார்கள்? இல்லை நீதிதான் சும்மா இருக்குமா ? -. கேளுங்கள் என் கதையின் மிகுதிப் பகுதியை ! ராஜவல்லி மயங்கி விழுந்ததைக்கூட அறியாதவ கைக் காற்றினும் கடுகிப்பறந்த விஜயேந்திரன் வில் விஜயனின் காம்பீர்யத்துடன் குதிரையைச் செலுத்தி ஞன். தொடர்ந்து வந்த தன் நாட்டுப் படைகளின் குளம்பொலியும் வீரமுரசங்களின் சத்தமும் மாறிமாறிக் கேட்டன. தன் தாய்த் திருநாட்டின் ஆலயமணிச் சின்னம் பொறித்த கொடிகளிலே அவன் தன் குல தெய்வமான அன்னை பவானி தேவியைத் தரிசிக்க