பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி வாசவி Y. 3 | நெற்றிக்கண்ணைப் போன்ற அமைப்பில் ஒரு மச்சம் இருந்தது அவனுக்கு. அது இப்போது தட்டுப்பட லாயிற்று. அதே தருணம், ஒளவைப்பாட்டி பாடின வயிற்றுப் பசிக் கோணங்கிக்கூத்துப் பாடலும் அவனுக்கு நினைவு வந்தது. இடும்பைகர் என் வயிறே என்று அவனும் தனக்குள் பாடிய வண்ணம், சுற்றுமுற்றும் நோக்கி ன்ை. அடி ஒற்றி வந்த அந்தரங்க ஒற்றர்களையோ, அல்லது அவனது மெய்க்காப்பாளர் சேனையையோ, பின்காவல் குழுவையோ காணுேம்! எந்தப் படையின் உதவியையோ, எந்த ஒற்றனின் துணையையோ நான் விரும்பாதவன்!” என்று அடிக்கடி இளவரசன் முழங் குவது உண்டு. அவ்வாசகத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அவரவர்கள் தத்தம் போக்கில் செயற் பட்டனரோ? என்னவோ? விஜயேந்திரன் எப்படி மயங்கி மண்ணில் விழுந் தான் என்றே அவனுக்குத் தெரியாது. எல்லாம் பசி மயக்கம். பசி வந்திடப் பத்தும் பறந்து போகுமே! குளிர் தென்றல் இதமாக வீசியது. விஜயேந்திரன் அப்போதுதான் கண்களே மலரத் திறந்தான். உதடுகளில் இன்பச்சுவை பட்டது. உடம் பில் ஒரு புதுத்தெம்பு ஊறியிருந்தது. சுற்றுமுற்றும் அவன் நோக்கினன். யார் அது?’ என்று கேட்கி ருன். திறந்த வெளியிலிருந்து யாரோ ஒர் இளைஞன்