பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தாயின் மணிக்கொடி ' ராஜவல்லி!” என்று மங்களபுரி நாட்டின் வருங் கால அரசன் விஜயேந்திரன் அழைத்தானல்லவா? ஆம்; அவன் அவளைப் பெயரிட்டு ஒருமுறை மட்டுமா அழைத்தான்? அதுதான் இல்லை. பலதடவை கூப்பிட்டான். கூப்பிட்டும். அவள் ஏறெடுத்துப்பார்த் தால்தானே? ஒருகால், தன்னேயும் போருக்கு உடன்ழைத்துச் செல்லுமாறு வீர மங்கையாக விளங்கி விடுத்த வேண்டுகோளை இளவரசன் நிறைவேற்ருமல் பறந்து விட்டானே?- அதல்ை அவன் கோபம் கொண்டிருக்கக் கூடுமோ? அவன் தன்னுடைய மாமன் மகளை ஆவலுடன் நெருங்கினன். அன்று போர்க்களத்தில் தனக்கு உதவிய இளைஞனின் கண்களைக் கண்டபோதே நெஞ் சம் நெகிழ்ந்த விதத்தையும் அவன் மறந்துவிட வில்லை; மறந்து விடவும் முடியாது. அவன் கொண்ட சந்தேகம் ஊர்ஜிதமானது. இப்போது உண்மையும் புலகிைவிட்டது. ஆகவே, உரிமையுடன் " ராஜ வல்லி!” என்று மீண்டும் குரல் கொடுத்தான். ஆளுல் ராஜவல்லியோ அந்தக் குரலையோ, அல் லது, அந்தக்குரலேக் கொடுத்தவனையோ தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. -