பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜவல்லி! - 47 அதற்குள், ராஜவல்லியை நெருங்கிய அழகி வாசவி, ' உனக்கு இளவரசரைத் தெரியுமா இதற்கு முன்பாகவே? ’ என்று கேள்வி கேட்டாள். அதற்கு ராஜவல்லி தலையைப் பலமாக உலுக்கி விட்டு, எனக்குத் தெரியவே தெரியாது அம்மா !” என்று உறுதியான பாவனையுடன் செப்பினுள் அவள். " உண்மையாகவா?’ என்று கேட்டு விட்டு கையிலிருந்த சவுக்கை முடுக்கினுள். சவுக்கின் அடி ராஜவல்லியின் மேனியைத் தழுவியது. "ஆம், அம்மா!” என்று வெகு நயமான பணி வுடன் பதில் சொல்லி நின்ருள் ராஜவல்லி. இவற்றையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டு நின்ற விஜயேந்திரனே அப்படியே செப்புச் சிலையான்ை ! அவன் பார்வை ஜாடையாக ராஜவல்லியின் பக்கம் திரும்பியது. அப்போது அவனைப் பார்த்த பார்வை யில் இருந்த சமிக்ஞை அவனுக்கு ஆறுதல் ஈந்தது. உடனே தற்காத்துக்கொண்டான் அவன். "வாசவி மனமயக்கத்திலே நான்தான் சற்று நினைவு பிசகிப் போய்விட்டேன். இந்தப்பெண் து வல்லி, எங்கள் மங்களபுரியினைச் சார்ந்தவள்.