பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தாயின் மணிக்கொடி மனைத் தாதியர் கூட்டத்தைச் சேர்ந்தவள். அதுதான், பார்த்தமுகம் என்ற கனவில் கினைவைத் தடுமாறவிட் டேன். 'கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராது வாழ்கின்றவளே பெண் என்னும் அறமொழிக்கு ஏற்ப வாழும் பெண்களின் பட்டியலைச் சேர்ந்த பெண் இவள். அதோயார், அவள் கழுத்தில் தவழுகிற தாலியை ' என்று விஸ்தாரமாக எடுத் துரைத்தான் இளவரசன். இதைக் கேட்டதும் வாசவிக்கு நிம்மதி உண் டானது. ராஜவல்லியின் கழுத்திலிருந்த தாலி வேறு அவளுக்கு ஒட்டிக்கு இரட்டியான மகிழ்ச்சியைத் தந்தது. “சரி, நீ தப்பிப்போ ! ... என் வழியில் குறுக் கிடாதே, சகோதரி 1’ என்று ராஜவல்லியிடம் வேண்டி, அவளுக்குப் பணமுடிப்பு ஒன்றையும் கொடுத்து வழியனுப்ப முயற்சி செய்தாள் வாசவி. . அப்போது ராஜவல்லியும் புறப்படும் . நோக்கத் துடன் நிலைமறந்த நிலையுடன் நின்ருள். வாசவிக்கு ஆனந்தம் தலைகால் புரியவில்லை. ஆகவே, ஜல்-ஜல் என்று சலங்கை ஒலிக்கப் பரதம் பயின்று ஆடினுள் ஜதியும் சுதியும் இணைய, லயமும் பாவமும் சேர அவள் ஆடினள்.