பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தாயின் மணிக்கொடி அடுத்த இமைப்பொழுதில், வாசவியைக் கைது செய்தான் ஒருவன். அருகில் நிலவுத்தீவு மன்னன் கஜேந்திரபாகு நின்ருன்! விஜயேந்திரன் திக்குத் திசை பிடிபடாமல் தவித் தான். "அன்பரே! நீங்கள் ஊகித்துச் சொன்னமாதிரி நான் கஜேந்திரபாகுவின் கைப்பாவைதான். உங்களை என் கைப் பாவையாக்கவே நான் இந்தப் பாதாளக் குகைக்கு உங்களைக் கொண்டுவந்தேன். வந்த இடத்தில் உங்கள் அழகுக்கும் அன்புக்கும் அடிமை யானேன். உங்களை நயமாக வஞ்சித்து, உங்கள் வசமுள்ள அந்த அடிமைப் பத்திரத்தை நான், கைப் பற்ற வேண்டுமென்பதே எனக்கு இடப்பட்டிருந்த அரசாங்கக் கட்டளையாகும் ' என்று உணர்ச்சி வசப் பட்டுக் கூறி நிறுத்தினுள் வாசவி. நிலவுத்தீவின் சூழ்ச்சிகள் விளையாட்டு மட்டு மல்லாது, வேடிக்கையாகவும் அன்ருே இருக்கின்றன!” என்று ஏளனமாய்க் கூறினன் மங்களபுரிச் செம்மல். இதைக் கேட்டுவிட்டு, கஜேந்திரபாகு திரும்பவும் சிம்மக் குரலெடுத்துச் சிரிப்பைக் கக்கினன். "ஆம் இன்னும் பார்!’ என்று சொல்லி, ஏதோ கை அடை யாளம் செய்தான்.