பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜவல்லி! 5| அடுத்த சிறுபொழுதில், இளவரசன் விஜயேந்திர னின் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டன, அவன் வசமிருந்த நிலவுத்தீவின் அடிமைச் சாசனம் பறிக்கப் பட்டு, பற்றி எரிந்த தீவட்டிக்கு இரையானது. “எங்கே அந்தப் பெண்?’ என்று கஜேந்திரபாகு கேட்டதுதான் தாமதம், அதற்குள் ராஜவல்லி நெருக்க மாகத் தொங்கிய ஆலவிழுது ஒன்றைப் பிடித்துத்தாவி எங்கோ மறைந்து விட்டாள். பேயறைந்தாற் போல் நின்ற கஜேந்திரபாகு சுய ஞாபகம் பெற்றதும், சரி; இவர்களே, காலகண்டன் பாதாளக் குகையில் தனித்தனியே அடைத்து வையுங் கள்!” என்று ஆணையிட்டான்!