பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தாயின் மணிக்கொடி வாசவி கீழ்ப்புறத்திலிருந்த அறையிலும், விஜயேந் திரன் மேற்புறத்திலிருந்த அறையிலுமாக அடைத்து வைக்கப் பட்டனர். வாசவிக்கு நடந்த கடமைகளிலே பத்துமடங்கு கூடுதலாகவும், தக்க ராஜமரியாதையுடனும் இளவரசன் விஜயேந்திரனுக்கு நடந்தன. வாசவி துளியளவுகூட சலனமின்றி இருந்தாள். ஆனல், விஜயேந்திரனே பொலிவின்றிக் காணப் பட்டான். இருக்காதா பின்னே பீடு பெற நில்! " என்று அடிக்கடி அவன் தந்தை விஜயசிம்மன் மன்னர் அறிவுரை புகட்டியவரல்லவா? இப்பொழுது அவன், வசமாக அல்லவா அகப்பட்டுக்கொண்டு விட்டான்? தன் முறைப் பெண்ணும் எதிர்காலத்தில் மங்களபுரி ராணியுமான ராஜவல்லியின் நடத்தைகள்தாம் அவ னுக்கு அதிகமான ஆச்சரியத்தைக் கொடுத்து வந்தன. வேண்டுமென்றுதான் அவள் என்னைத் தெரியாது என்று சொல்லியிருக்க வேண்டும். சாகஸமும்தானே போர்முறைத் தந்திரங்களில் முக்கியமான இடம் வகிக் கிறது. ஆம்; அதுவேதான் உண்மை! அவளும் என் போல அகப்படாமல் தப்பித்ததே நல்லது. கெட்டிக் காரி அரமனைப் பூங்காவில் காங்கள் சிறு பிராயத்தே விளையாடுகையில் எவ்வளவோ துடிப்புடன் இருப் பாளே இராஜவல்லி நான்மட்டும் முக்கியமல்ல; நாடும் அவளுக்கு முக்கியமே என்பது அவள் லட்சியம் அதல்ைதான் என்னத் தெரியாததுபோல வாசவியிடம்