பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமைப் பத்திரம்! 55 அவள் நடந்து கொண்டிருக்கிருள். பாவம், வாசவி!... என் நெஞ்சிலேயும் நினைவிலேயும் என் ராஜவல்லிக்குத் தவிர வேறு யாருக்குமே இடமில்லை என்பதை அவன் விரைவிலேயே அறிந்து கொள்வாள். இராஜவல்லி இந்நேரம் என் நிலையை அரண்மனையில் சொல்லியிருப் பாளோ? சொல்லியிருக்கா விட்டால்தான் நல்லது: ஏனென்ருல், என் நிலைமை அறிந்து அப்பா வருந்தக் கூடும் என்று இப்படிப்பலவாருக எண்ணி எண்ணி ஏங்கினன். - காலகண்டன் குகை, மயானபூமியாக விளங்கியது. காவலாளிகளின் கால்நடை ஒலியையும் குத்தீட்டி களின் சலங்கைச் சத்தத்தையும் தவிர்த்து, யாதொரு அரவமும் இல்லை. திடுதிப்பென்று ஏதோ கையொலி கேட்டது. விஜயேந்திரன் திரும்பினன். வாசவி கூப்பிட்ட குரல் கேட்டது. அப்படியே அப்படியே தொடாமல்கிடந்த உணவுத் தட்டுகளைக் காலால் எற்றிவிட்டு, எழுந்தான். "இதோ பாருங்கள், இளவரசே இந்தச் சுரங்கம் வழியே தப்பிவிடுங்கள். தப்பிச் சென்று கஜேந்திர பாகுவின் நாகரிகமிழந்த அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றி யும், அவனது அநியாயமான மண் மோகம் *న உலக நாடுகளிடமும் உங்களது இன.