பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தாயின் மணிக்கொடி நாடுகளிடமும், சொல்லி இவனை உலக அரங்கத்தில் நிறுத்தி மானத்தை வாங்குங்கள்!” என்ருள் வாசவி. பெண்ணினும் பேதை நீ வாசவி என்னுடைய தனித்த வீரத்தில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. நான் கோழையாக இங்கிருந்து தப்பு ஒப்பேன். தமிழச்சாதி எனது பரம்பரை விடியட்டும் பொழுது, கஜேந்திரபாகுவை அழைத்து வரச்சொல்லி நான் அவனுடன் தனித்துகின்று பொருதப் போகிறேன்! வரட்டும், வரட்டும்!” என்று முப்படையின் வீரச் சங்கம் போல முழங்கிளுன் இளவரசன். அப்போது, ஏதோ ஒர் அவல ஒலி அழுகை ருபத்தில் வெடித்துப் புறப்பட்டது. விஜயேந்திரன் நாலு பக்கமும் பார்வையிட்டான். காவலாளியைக் கூப்பிட்டுக் கேட்டான். "இக்காட்டின் ராணியின் அழுகை ஐயா அது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், அரண்மனையில் குழந்தையின் - அதாவது இளவரசரின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடந்தது. குழந்தைக்குப் பரிசில் கள் கொடுத்து, விழா முடிந்தது. பொழுது விடிந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. அந்தக் குழந்தை இருந்திருந்தால், இந் நேரம் உங்கள் மாதிரி இருந்திருக்கும்... இளவரசரை இழந்த துயரத்தில் புத்தி பேதலித்துவிட்ட ராணி தாடகாதேவியார், கினைத் துக் கொண்டால் நேரம் காலமின்றி இப்படித்தான்