பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தாயின் மணிக்கொடி பொழுது விடிந்ததோ இல்லையோ, நிலவுத்தீவு அமளிதுமளிப் படலாயிற்று. மங்களபுரி நாட்டின் இளவரசன் விஜயேந்திரன் கைது செய்யப்பட்ட சேதி கேட்டு மன்னன் விஜய சிம்மன் படை சூழ, படை கொண்டுவந்து விட்டான். இச் செய்தியைத் தெரிவிக்க ராஜவல்லி ஆவ லுடன் விஜயேந்திரனிடம் வந்தாள். அத்தான்' என்று ஆனந்தம் பொங்க விளித்தாள். விஜயேந்திரன் திரும்பினுன் அதே நேரத்திலே, சகோதரி!” என்று குரல் கொடுத்தாள் ஆடல் அழகி வாசவி. ராஜவல்லியும் விஜயேந்திரனும் ஒரு சேரத் திரும் பிப் பார்த்தார்கள். மறுகணம் வாசவி நுரை கக்கித் தரையில் சாய்வதை அவர்களால் காண முடிந்தது. "இளவரசே! உங்களை அடையக் கனவுகண்டேன். அந்தப் பாக்கியம் என் சகோதரிக்குக் கிடைத்திருக் கிறது. இளவரசே என்ன மறந்து விடாதீர்கள்! * * உங்களது நெற்றிக்கண் மச்சம்.. ! என்று சொல்லிக் கொண்டு வந்தவள், மேற்கொண்டு தொடரமுடியாமல் வாயடைத்துப் போனுள். சற்றுப் பொழுதிற்கெல்லாம். ஏதேதோ பயம் கிரம்பிய ஆரவாரம் கேட்டது. அடுத்த அரைக்கால் நாழிகைக்கெல்லாம், "மகனே' என்று விம்மியபடி அங்கு மங்களபுரி வேந்தன் விஜயசிம்மன் நின்ருன்.