பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - தாயின் மணிக்கொடி குள்ளாகவே, நிலவுத்தீவின் ராணி தாடகைதேவி வந்தவள். 'மகனே' என்று அலறிப் புடைத்து விஜ யேந்திரனின் பாத கமலங்களிலே சரண் புகுந்தாள். உடனே அவளது மார்பகத்திலிருந்து பாலமுதம் பீறிட்டது. சித்தம் தெளிந்து நின்ருள்! உணர்ச்சி வசப்பட்ட இளவரசனும் தன்னையும் அறியாதவகை, 'அம்மா’ என்று வீறிட்டான். இளவரசனை அணைத்தபடி கண்ணிர் பெருக்கினுள் தாடகைதேவியார். அப்போது, 'அத்தான்! நிலவுத்தீவு மன்னன் பாசவெறி கொண்டவர் என்பது உண்மை. தம் மைந்தனின் உண்மை ரகசியம் எனக்குத் தெரியும் என்று சொன்னதும், என் இஷ்டப்படி எதுவும் செய்யச் சித்தம் என்ருர், உடனே என் விருப்பம்போல, தன் அடிமைப்பத்திரத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். என் பொய் இப்போது உண்மையாக ஆகிக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறதே! . மாமா சொல்லுங்கள் உண்மை நடப்பை..." என்று மன்ருடினுள் மங்கை ராஜவல்லி. - "சொல்லுகிறேன் கேள், மருமகளே! விஜயேந் திரன்தான் நிலவுத்தீவு மன்னன் கஜேந்திரபாகுவின் காணுமற்போன மைந்தன். நடந்த கதை இதுவே. இளவரசனை அவன் அணிந்திருந்த அணிகலன்களுக்கு ஆசைப்பட்டு அரண்மனைப் பணியாளன் கோபிசந்தர் என்பான் குழந்தையைச் சாகடிக்க முற்பட்ட நேரத்தில்