பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் குறுக்கிட்டேன். குழந்தையைக் காத்தேன். பல ஆண்டுகளாகியும் மதலைச் செல்வம் அற்றிருந்த எனக்கு இக்குழந்தை தெய்வமாக வந்தது போலத் தோன்றியது. நெற்றிக்கண் மச்சமும் என்னைக் கவர்ந் தது. இரவே ரகசியமாகத் தூக்கிச் சென்றேன். இந்த ஒரு ரகசியம் அம்பலமாகக் கூடாதே என்றுதான் வளர்த்த பாசம் ஓங்கியது. ஆனால், பொய் என்றுதான் வாழ்ந்தது?... குழந்தைப்பாசமே என்னே இத்தகைய அவலநிலைக்கு இறக்கிவிட்டது... 'மலேபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும் தாழ்வுக்குக் காரணமான செயல்களே ஒரு குன்றிமணி அளவுக்குச் செய்தாலும்கூட, தாழ்ந்து போய்விடுவர்' என்ற முதுமொழிக்கு நானும் இலக்குத் தான்! ...' என்று சொன்னுன் மங்களபுரி அரசன் விஜயசிம்மன், கையிலிருந்த நிலவுத்தீவு மன்னனது அடிமை ஒப்பந்த ஒலையைத் தீக்கு இரையாக்கினுன்! ஆற்றமைப் பெருமூச்சுடனும் ஆருக வழிந்த விழிநீருடனும் நிலவுத் தீவுமன்னன் கஜேந்திரபாகுவை