பக்கம்:தாயுமானவர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் 令 83 令 'நாதாந்த வெட்டவெளியே - மலைவளர் காதலி - 8 என்று பகர்ந்தனர். சிவசக்தி சுத்த மாயையிலே தொடர்புடைமையாலும், மந்திரங்களின்மூலம் சுத்தமாயையாதலாலும் நாதவடிவாகிய மகாமந்திர ரூபியே என்றனர். சிவசக்தி மாயையோடு உயிர்க ளின் பொருட்டுத் தொடர்புற்றாலும் அதன்கண் மயக்கமுற் றுத் துவக்குறாது தன்னியல்பு மாறாது நிற்கும். ஆதலின், 球x அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னிஎன மறைபேசும் ஆனந்தரூப மயிலே' - மலைவளர்க்காதலி - 5

  • எனறு கூறன.

(ஐ) இறைவன் எங்கும் நிறைகின்ற பொருளாயிருப்பினும் சிலவிடங்களில் தயிரில் நெய்போல் - எள்ளில் எண்ணெய் போல் - அந்தர்யாமியாக விளங்கி அருள் புரிவான். சுகவாரி யின் ஒரு பாடலில் (10), 'இறைவனாகிய நீ வீற்றிருப்பது அண்டத்தின் மீதுள்ள சிவலோகத்திலோ, அண்டத்திற்கு வெளியேயுள்ள் உருத்திர புவனங்களிலோ, கதிரவன் மண்டலத்தின் நடு விலோ, ஒமத்தியின் நடுவிலோ தண்ணமுதத்தாரை பொழியும் அம்புலி மண்டலத்திலோ, அன்பர்கள் உள்ள முருகி மலர்கள் தூவி வணங்கி வழிபடும் திருவுருவங்க வளிலோ, திசைகளின் முடிவுகளிலோ, வானிலோ, விந்து தத்துவத்திலோ, வேதாந்த நிலையிலோ, சித்தாந்த நிலை யிலோ, காணப்படும் பொருள்கள் பலவற்றிலுமோ, காணப்பெறாத சூனியநிலையிலோ, முக்காலத்திலே படைப்பிடம் தன்னிலோ, ஐம்பொறிகள் அடக்கம் உடைய தொண்டர்களிடத்திலோ இவற்றிலே யாண் டென்று அடியேனுக்கு உண்மை பகர்ந்தருள்வாயாக' என்று வேண்டுகின்றார். 3. மூலப்பாடலைப் படித்து அதுபவிக்க வேண்டும். அடிகளாரின் வாக்கின் கம்பீரத்தில் அதில் காணலாம். (சுகவரி - 10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/103&oldid=892090" இலிருந்து மீள்விக்கப்பட்டது