பக்கம்:தாயுமானவர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 90 & தாயுமானவர் மெளனகுருவாகிய தமது ஆசாரியப் பெருந்தகை, “பாராதி பூதம்நீ அல்லை - உன்னிப் பார்இந் திரியம் கரணம் நீஅல்லை ஆராய் உணர்நீ” - ஆனந்தக்களிப்பு - 9 என்றும், 'ஐந்துபுலன் ஐம்பூதம் கரன மாதி அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை; இந்தஉடல் அறிவறியா மையும்நீ அல்லை; யாதொன்றும் பற்றின்அதன் இயல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீஉன் பக்குவம்கண் டறிவிக்கும் பான்மை யேம்யாம்"


ஆகாரபுவனம் - 18

என்றும் இயம்பியருளினதாக உரைப்பர். இவற்றால் நாம் அறிந்து கொள்ள வேண்டியவை: பூதம், மனம், குணம் முதலிய தத்துவங்களில் ஒன்றாகாது உயிர், அஃது அறிவு டைய பொருளேயன்றி அறிவு என்றல் உண்மையன்று. அஃது அறியாமையால் பிணிக்கப்படுவதன்றி அறியாமை அதன் குணம் அன்று. இவ்வாறு கூறுதல் தவறு. உயிர் அறிவுடைப் பெருளாக இருப்பினும் எதைப்பற்றி நிற்குமோ அதனதன் இயல்பாய் நிற்கும் இயல்புடையது. இங்கு பளிங் கனைய சித்து' என்ற தொடர் சிந்திக்கத்தக்கது. படிகம் (ஸ்படி கம், அல்லது பளிங்கு) தன்னை அடுத்துள்ள பொருளின் நிறத்தையே தன் நிறமாகக் கொண்டு நிற்கும். அஃதாவது, அது நீலமணியைச் சார்ந்தபோது நீலமாயும், செம்மணியைச் சார்ந்தபொழுது செம்மையாயும் விளங்கும். இதை நினைந்தே வள்ளுவப் பெருந்தகையும் அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள் 706) என்று குறிப்பிட்டார். படிகத்தின் வண்ணம் இவ்வாறு சார்ந்ததன் வண்ணமாக மாறுபாடு அடைவதாயினும், படிகத்தின் வண்ணம்' என்று ஒரு நிறம் உண்டு என்பதனை அறிதல் வேண்டும். இன்னும் கண் ஒளியைச் சார்ந்தபொழுது ஒளி வடிவமாயும் இருளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/110&oldid=892098" இலிருந்து மீள்விக்கப்பட்டது